அகவை காணும் எம் அகல் !!

” துடிப்புமிக்க இளைஞர்களை எனக்கு தாருங்கள். இந்த பிரபஞ்சத்தையே மாற்றிக் காட்டுகின்றேன் ” என்றார் சுவாமி விவேகானந்தர். அதற்கிணங்க பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை வலுவூட்டி எமது சமூகத்தை மாற்றியமைக்கும் தமது கனவை, இன்று நனவாக்கிக் கொண்டிருக்கும் சமூக நலன்புரி அமைப்பு மற்றும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஸ்தாபகர் திரு.க சற்குணேஸ்வரன் ஐயா அவர்களின் பிறந்த தினமானது மிகவும் சிறப்பான முறையில் எமது தொழில்நுட்பவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

சமூக நலன்புரி அமைப்பு, விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, சமுதாய அறக்கட்டளையின் சேவையாளர்கள் உள்ளிட்ட கல்லூரி மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

30 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக நலனுக்காகவும் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் கல்வி மேம்பாட்டிற்காகவும் இயன்றளவும் தன்னை முழுமனதாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் சமூக தீபம் திரு.க.சற்குணேஸ்வரன் ஐயா அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர் இன்னும் பல சேவைகள் புரிந்து சீரும் சிறப்புமாக நீண்ட ஆயுள் பெற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *