அறநெறி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் !

தற்போதைய மாணவர் சமுதாயத்திற்கு பாடசாலைக் கல்வியை மட்டுமல்லாது ஒழுக்கம் மற்றும் விழுமியப் பண்புகளையும் போதிப்பதன் மூலம் முறையான பிரஜைகளை உருவாக்க முடியும்.

அதன் பிரகாரம் அறநெறிப் பாடசாலைகள் அவ்வாறான ஒழுக்க விழுமியப் பண்புகளைப் போதித்து வருகின்றன. அதற்கிணங்க அப்பாடசாலைகளுக்கு எம்மாலான உதவிகளை வழங்குவது எமது கடமையாகும்.

அந்த வகையில் ஆரையம்பதியில் அமைந்துள்ள மாவிலங்கத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள அறநெறி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்றலுக்கான உபகரணங்கள் வழங்கும் செயற்பாடானது மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. 80 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமக்கான அப்பியாச கொப்பிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர். ஆரையம்பதி பிரதேச செயலாளர், கலாசார உத்தியோகத்தர் உள்ளிட்ட ஆலய நிர்வாகத்தினரும் இணைந்து இந்நிகழ்வை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக உதவி புரிந்த நியூசிலாந்தில் வசிக்கும் திருமதி. கணேசராணி ரவீந்திரன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *