கிராமங்கள் தோறும் கணினிப் பயிற்சி

மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வறுமை கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய கிராமப் பிரதேச மாணவர்களுக்கான அடிப்படைக்கணினி பயிற்சி செயலமர்வுகளை தொடர் கட்டங்களாக நடாத்தி வருகின்றது.

அந்த வகையில் மாணவர்களுக்கான செயலமர்வானது மாவிலங்கத்துறை பிரதேசத்தில் இடம்பெயற்றது. மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பயிற்சி உத்தியோகத்தர் திரு.சார்ள்ஸ் கிரேஷியன் அவர்களால் இச்செயலமர்வானது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இச்செயற்பாட்டிற்காக எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் மனிதநேய நம்பிக்கை நிதியத்தினருக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Similar Posts