|

சமவாய்ப்புடனான கல்விக்கும், திறனுக்கும் சமுதாய கல்லூரி

மண்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆரையம்பதியில் கோயில்குளம், மாவிலங்கன்துறை, போன்ற கிராமங்களில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள், விசேட தேவையுடையோர் என அனைவரினையும் கருத்தில் கொண்டு இவர்களிற்கான விசேட பயிற்சிகளை வழங்கும் புகலிடம் சமுதாயக் கல்லூரி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அமெரிக்க நாட்டு பொறுப்பாளர் திரு.கை.அரவிந்தன் மற்றும் அவரது துணைவியார், ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி. தட்சணகௌரி தினேஸ் அம்மணி அவர்களுடன் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களினால் புகலிடம் சமுதாய கல்லூரி திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலைக்கல்வியின் பின்னர் தங்கள் வாழ்வினை திட்டமிடமுடியாமல் தடுமாறும் இளைஞர்கள், விசேட தேவையுடைய மாணவர்கள், கல்வியில் ஆர்வமுள்ள வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் என அனைவரையும் வலுவூட்டும் ஒரு செயற்பாட்டிகாக இந்த இடத்தில் எமது சமுதாய கல்லூரி முறைமையானது சமுக மாற்றத்திற்கான ஒரு படியாக அமைகின்றது.

சமவாய்ப்புடன் அனைவருக்கும் கல்வி மறுக்கப்படாமல் கொடுக்கப்பட வேண்டும் அத்துடன் அவர்களின் விசேட திறமைகள் வளர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் எமது அறக்கட்டளை உறவுகளின் அனுசரணையில் இந்த செயற்பாட்டினை ஆரம்பித்து வைக்கின்றோம்.

Similar Posts