சிறுவர் தினத்திற்கான பரிசுகள்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் உதவித்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட திருநீற்றுக்கேணி நலன்புரி பாலர் பாடசாலையின் சிறுவர்களைப் பார்வையிடல் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு அதற்கான பரிசுப் பொருட்களை வழங்குதல் தொடர்பான நிகழ்வு இன்று நடைபெற்றது.

இப்பாடசாலைக்கு கடந்த மார்ச் மாதம் முதல் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் விசேட சத்துணவு வழங்கல் போன்ற செயற்பாடுகளிற்கு அமெரிக்காவில இருந்து திரு.நல்லதம்பி குடும்பத்தினர் உதவி வழங்கிக்கொண்டு வருகின்றனர்.

சிறுவர் தினத்தினை முன்னிட்டு பரிசுப்பொருட்களும் வழங்கி சிறுவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். தொடர்ச்சியான திரு.நல்லதம்பி குடும்பத்தின் உதவி மூலமாக வழங்கப்படும் சத்துணவு திட்டத்தினால் மாணவர்கள் ஒழுங்காக பாடசாலைக்கு வருகைதருவதுடன் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இப்பாடசாலையில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களே அதிகம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts