ஜீவானந்தா.. பெண்களுக்காய் ஓர் இல்லம்
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது ஆறு திட்டங்களினூடாகப் பல்வேறு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க சிறுவர் பராமரிப்புத்திட்டம் மற்றும் விசேட தேவையுடையோர்க்கான திட்டங்களின் மூலம் இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கான எமது பங்களிப்பினை வழங்கும் முகமாக அவர்களுக்கான விசேட உணவு, விசேட தினங்களில் அவர்களுக்கான உடை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
அந்த வகையில் எமதுbபுதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் காணப்படும் ஜீவானந்தா பெண்கள் காப்பகமானது 10 சிறுமிகள் மற்றும் 10 முதியவர்களை உள்ளடக்கியதாக காணப்படுவதோடு எமது மாணவர்களைப் பொறுப்பெடுத்தல் எனும் திட்டத்தினூடாக எம்மால் பொறுப்பெடுக்கப்பட்ட மாணவி ஒருவர் ஏனைய மாணவிகளுக்கான பயிற்றுவிப்பாளராகவும் இல்லத்தினருக்கு உதவியாகவும் காணப்படுகின்றார். இவர்களுக்கான வாழ்க்கைத்திறன் பயிற்சிகளையும் நாம் வழங்குவதற்காக திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான செயற்பாடுகளினூடாக எம்முடன் இணைந்து பயணிக்கும் எமது புலம்பெயர் உறவுகளுக்கு எமது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு இவ்வாறு தாங்கள் முன்வந்து செய்யும் சிறிய பங்களிப்பானது அவர்களின் பாரிய மாற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் மாற்றமில்லை.
இவர்களுக்கான தேவைகளாக..
🎯 ஒரு நாள் விசேட உணவுக்காக 100 USD,
🎯 உடைகளுக்காக 330 USD (வருடத்திற்கு 4 முறை),
🎯 கற்றல் உபகரணங்களுக்கு 50 USD (மாணவி ஒருவருக்கு வருடத்திற்கு)
நிருவாகம்
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை,
மட்டக்களப்பு.








