நாளைய சிந்தனையாளர்களுக்குஇன்று ஓர் களம்

சிறு வயது முதல் ஒரு மனிதனிடத்தில் விதைக்கப்படும் உயரிய சிந்தனையே நாளைய நாட்டின் சிறந்த பிரஜைகளை உருவாக்க வல்லது. அதனடிப்படையில் மாணவர்களை இன்றே நேரிய சிந்தனையாளர்களாகக் கட்டியெழுப்புவது எமது கடமையாகும்.

அந்த வகையில் கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 9 ஐச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கான வாழ்க்கைதிறன் செயலமர்வு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வாழ்க்கைத்திறன் பயிற்சி பெற்ற சேவையாளர்களால் நடாத்தப்பட்டது.

நேர்மறை எண்ணங்கள் நமது வாழ்வில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது, நேர்மறை எண்ணங்களே ஒரு மனிதனின் குணத்தையும் வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றது என்பது பற்றிய தெளிவூட்டல் சிறு செயற்பாடுகளூடாக சிறப்பாக வழங்கப்பட்டது.

நேர்மறையான எண்ணங்களே சிறப்பான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. இவ்வாறான செயலமர்வுகளை சிறுவர்களுக்கு வழங்குவதன் மூலம் பாடசாலை சமூகத்தினரிடையே சிறிதளவேனும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

Similar Posts