பாலர் பாடசாலையினருக்கான சீருடைகள்

எமது சிறுவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் திட்டத்தினுள் அடங்கும் 5 பாலர் பாடசாலைகளில் கல்வி பயிலும் 125 சிறுவர்களுக்கான சீருடைகள் எமது நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் மற்றும் கள சேவையாளர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

எமது பாலர் பாடசாலைகளும் இச் செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது நிதி அனுசரணையை வழங்கிய எமது அறக்கட்டளை உறவுகளும் வருமாறு =

  • திருநீற்றுக்கேணி நலன்புரி பாலர் பாடசாலை, ஆரையம்பதி – திரு.திருமதி.மனோகரி நல்லதம்பி குடும்பம், அமெரிக்கா
  • கௌரி பாலர் பாடசாலை, கிரான் – திரு.செந்தில்குமாரன், அமெரிக்கா
  • விபுலானந்தா பாலர் பாடசாலை, பலாச்சோலை – திரு.இ.ஏகாம்பரம், கனடா
  • மாணிக்கப் பிள்ளையார் பாலர் பாடசாலை, புலிபாஞ்சகல் – திரு.சிவசுந்தரம், இலண்டன்
  • சக்தி பாலர் பாடசாலை, வந்தாறுமூலை – திரு.முருகேசு விசாகன், கனடா

இச்செயற்பாட்டிற்காக அனுசரணை வழங்கிய எமது உறவுகளுக்கும் இச் செயற்பாட்டின் மேலதிகமான பங்களிப்பை எமது அறக்கட்டளையினூடாக வழங்கிய திரு.வலன் சிவராஜா மற்றும் திருமதி.ஸ்ரீநிதி சுப்ரமணியம் அவர்களுக்கும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *