மாதிரிப் பாடசாலையினரின் சித்திரை விழா

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் பாலர் பாடசாலைகளைப் பொறுப்பெடுத்து ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு மற்றும் மாணவர்களுக்குரிய போசாக்கான உணவு போன்றவற்றை வழங்குவதன் மூலம் சிறுவர்களுக்கான பராமரிப்புத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையில் ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பிரதேசத்தில் அமைந்துள்ள எமது மாதிரிப் பாலர் பாடசாலையான நலன்புரி பாடசாலையில் சித்திரை தினக் கொண்டாட்டம் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது. பாலர் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுடன் எமது அறக்கட்டளையின் சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நலன்புரி பாலர் பாடசாலைக்கான அனுசரணையை வழங்கும் அமெரிக்காவில் வசிக்கும் திருமதி.மனோகரி நல்லதம்பி குடும்பத்தினருக்கு எமது அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *