7 more students

மேலும் 7 மாணவர்கள்..!

எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப் பொருளின் கீழ், விவேகானந்த சமுதாய அறக்கட்டளை முன்னெடுத்து செயற்படுத்தும் மாணவர்களைப் பொறுப்பெடுக்கும் திட்டமானது கடந்த 6 ஆண்டுகளாக 162 மாணவர்களை உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இத்திட்டத்தின் வழியாக, மேலும் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நோக்குடன், எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதன் மூலம் அவர்களது கல்வியில் இடைநிறுத்தம் ஏற்படாமல் தடுப்பதே எமது முக்கிய நோக்கமாகும்.

அந்த வகையில், அமெரிக்காவில் வசிக்கும் திரு.எஸ்.லோகேந்திரா அவர்கள் 5 மாணவர்களையும் அமெரிக்காவைச் சேர்ந்த திரு.சி.செந்தில்செல்வன் அவர்கள் 2 மாணவர்களையும் உள்ளடக்கியதாக எமது திட்டத்தினூடாக மேலும் ஏழு மாணவர்களை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்காக களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு அம்மாணவர்களுக்கு திட்டம் பற்றிய தெளிவூட்டலும் வழங்கப்பட்டதோடு இச்செயற்பாட்டில், எமது திட்ட முகாமையாளருள்ளிட்ட சேவையாளர்களும் பங்கேற்றமை சிறப்பானதாகும்.

இச் செயற்பாடுகள் மூலம் வறுமையைக் குறைக்க முடியாதெனினும், வறுமைக்கோட்டிற்குள் வாழும் மாணவர்களின் கல்வி இடைநிறுத்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல், அவர்களது எதிர்கால முன்னேற்றத்திற்கும் வலுச்சேர்க்கும் வகையில் அமையும் என்பதில் மாற்றமில்லை.

7 more students..!

With the support of our overseas well-wishers, under the theme “Empowering Students for Change”, the Vivekananda Community Foundation has been implementing a student sponsorship program for the past six years, benefiting a total of 162 students.

Through this program, our primary objective is to prevent interruptions in students’ education by selecting new students in collaboration with our overseas well-wishers and providing them with a monthly incentive allowance. This ensures that they can continue their studies without disruption.

In this regard, Mr. S. Logendra, who resides in the United States, has sponsored five students, and Mr. C. Senthilselvan, also from the United States, has sponsored two students, making a total of seven more students added to our program. A field visit was conducted to identify these students, during which they were given a clear understanding of the program. Our program coordinators and volunteers also actively participated in this process.

While these efforts may not completely eradicate poverty, they significantly help in reducing educational dropouts among underprivileged students and play a vital role in strengthening their path toward a brighter future.

Similar Posts