பசுமை உலகிற்கு ஓர் அடித்தளம்..

இருபத்தோராம் நூற்றாண்டின் இன்றைய காலப்பகுதியில் புவி வெப்பமாதல் நாம் எதிர்கொள்ளும் பாரியதொரு பிரச்சினையாகும். இது தொடர்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது கடமையாகும்.

அந்தவகையில், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் பசுமைப்புரட்சி திட்டத்தின் கீழ் பாடசாலை மட்டங்களிலிருந்து சுற்றாடல் முன்னோடிப் படையணி மாணவர்களை ஜனாதிபதி விருதிற்கு பரிந்துரைக்கும் வண்ணம் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக மாணவர்களும் இணைக்கப்பட்டு சுற்றாடல் மேம்பாட்டு முன்னோடி குழு உருவாக்கப்பட்டது.

இந்நிகழ்வில் எமது திட்டமுகாமையாளர், பிரதேச செயலகத்தின் சூழல் பாதுகாப்பு இணைப்பாளர், இரு பாடசாலைகளைச் சேர்ந்த நான்கு மாணவர்களுட்ட தொடர்பான சேவையாளர்களும் கலந்துகொண்டனர்.

எம்மை காக்கும் இயற்கை அன்னையை நாமும் காக்க வேண்டும். அவ்வாறே எம்மாலான பங்களிப்பை நாம் வழங்க வேண்டியது அவசியமாகும்.

Similar Posts