அறக்கட்டளையின் அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலொன்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் , உதவி பிரதேச செயலாளர், சமூக மட்டங்களுடன் பணியாற்றும் திட்ட உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட அறக்கட்டளையின் சேவையாளர்களும் கலந்துகொண்டனர்.

எமது அறக்கட்டளையினால் இவ்வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தெளிவூட்டலை அறிக்கையிட்டதுடன் இந்த ஆண்டிற்கான எமது அடைவுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

எதிர்வரும் வருடத்திற்கான திட்டங்களுடன் அவர்களுடனான எமது தொடர்பாடல் பற்றி கலந்துரையாடப்பட்டதோடு ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் எமது செயற்பாடுகளின் விரிவாக்கம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts