உயர்தர மாணவர்களுக்கான விசேட வகுப்பு பற்றிய களவிஜயம்
எமது அறக்கட்டளையுடன் கடந்த 3 வருடங்களிற்கு மேலாக இணைந்து செயற்பாடுகின்ற மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி பங்களிப்பில் எமது கல்விசார் உதவி பணிகளில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான விசேட வகுப்புகளுக்களை இலவசமாக நடாத்தும் திட்டத்தின் 2ம் கட்ட நிகழ்ச்சித் திட்டமானது மட்/ககு / கிரான் மத்திய கல்லூரியில் இவ் வருட மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறை படுத்தப்பட்டு கொண்டு வருகிறது.
இந்த செயற்பாடுகளை கண்காணிப்பு செய்யும் முகமாக பாடசாலைக்கு சென்று பிரதிஅதிபரை சந்தித்து கற்றல் செயற்பாடல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது எதிர்வரும் நாட்களில் கருத்தரங்குகள் மற்றும் கடந்தகால வினாத்தாள் பயிற்சிகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
எதிர்வரும் ஐனவரி மாதம் நடைபெறவிருக்கும் பரீட்சைக்கு மாணவர்களை தயார்ப்படுத்தி சித்தியடைதலை அதிகரிப்பதே எமது நோக்கமாகும்..
