திறமைக்கான ஓர் அங்கீகாரம் தொடரும் மேடைகளின் தேடல்

விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நோக்கத்தின் அடிப்படையில் ஒரு முறையான மாணவர் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் எமது திட்டங்களினூடாக பாலர் பாடசாலைகளுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோம்.

அந்த வகையில் 2023 ம் ஆண்டிற்கான இறுதி அறிக்கைகளுக்காக மேற்பார்வை செய்யும் வண்ணம் எம்மால் கனடாவில் வசிக்கும் திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் குடும்பத்தின் நிதியுதவி கிடைக்கப்பெறும் பலாச்சோலை விபுலானந்தா பாலர் பாடசாலைக்கான களவிஜயம் மேற்கொள்ளப்பட்டு இவ் ஆண்டிற்கான செயற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் ஆண்டில் அவர்களுடனான எமது செயற்பாடுகள் பற்றியும் தெளிவூட்டப்பட்டது.

பாலர் பாடசாலையின் மாணவர்களும் தமது தனிப்பட்ட திறமைகளை நடைபெற்ற நிகழ்வுகளின் ஊடாக வெளிப்படுத்தி இருந்தனர். எனவே இம் மாணவர்களிற்கு 2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டிறுதி விழாவினையும் நடாத்தி அவர்களை ஊக்கப்படுத்தி பரிசு பொருட்களை வழங்க திட்டமிடுவதாக ஆசிரியர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *