nf

பின்தங்கிய கிராம மாணவர்களின் தேடலுக்காக எம்மால் ஒரு கணனிப் புரட்சி

கணினி மயமாக்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப அறிவானது இன்றியமையாததொன்றாகும். அந்த வகையில் வளர்ந்து வரும் மாணவர் சமுதாயத்தில் ஒவ்வொரு மாணவரும் அடிப்படைக் கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

பின் தங்கிய கிராமப் பிரதேசங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவை வழங்கும் வண்ணம் செங்கலடி பிரதேசத்தில் கித்துள் கிராமத்தில் கணினி வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது

மனிதநேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் கிடைக்கப்பட்ட மடிக்கணினிகளை பயன்படுத்தி விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஏற்பாட்டில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியால் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாற்றமுள்ள ஒரு நவீன மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் இவ்வாறான பல செயற்பாடுகளினூடாக எம்முடன் இணைந்து பயணிக்கும் மனித நேய நம்பிக்கை நிதியத்தினருக்கு சமூகம் சார்ந்த எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *