வெள்ளத்தின் சுவடுகள் தாண்டி அனைவர் இல்லங்களிலும் வழி பிறக்க எம்மாலான பொங்கல்பொதி
மழை பொழியவும் நிலம் செழிக்கவும் பயிர் விளையவும் உயிர்கள் வாழவும் காரணமாகின்ற சூரிய பகவானுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாகப் பொங்கல் செய்து கொண்டாடும் பண்டிகையே தைத்திருநாளாகும்.
தொடர்ச்சியான கனமழை மற்றும் முற்று முழுதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தைத்திருநாளை முன்னிட்டு பொங்கல் பொதி வழங்கும் நிகழ்வானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கரடியனாறு பிரதேசத்திலிருந்து பொறுப்பெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அடிப்படைக் கணனி பயிலும் கித்துள் பிரதேச மாணவர்கள் உள்ளடங்கலாக 21 குடும்பங்களுக்கான பொங்கல் பொதியானது வழங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து செங்கலடி பிரதேசத்தில் எம்மால் பொறுப்பெடுக்கப்பட்டு உதவித்தொகை பெறும் 7 மாணவர்களின் குடும்பங்களுக்கான பொதி வழங்கும் நிகழ்வு கொம்மாதுறை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம் பெற்றது. அதன் அடுத்த கட்டமாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பொறுப்பெடுக்கப்பட்ட 14 மாணவர்களின் குடும்பங்களுக்கான பொதியானது வழங்கப்பட்டதோடு, கிரான்குளம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 10 வறிய குடும்பங்களுக்கும் பொதியும் நிவாரணமும் வழங்கப்பட்டது. அவ்வாறே முல்லைத்தீவு அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திலும் 35 வறிய குடும்பங்களுக்கான பொதி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு மொத்தமாக 87 குடும்பங்களுக்கான பொங்கல் பொதி மற்றும் நிவாரணமும் வழங்கப்பட்டது.
இச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளைக்கு கரம் கொடுத்த அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சார்பாக இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இச் செயற்பாட்டிற்கு உதவியவர்கள்:
இலண்டன் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம்
கனடாவில் வசிக்கும் திரு.யோகேஸ்வரன் குடும்பம்
அமெரிக்காவில் வசிக்கும் திரு.திருமதி. ஶ்ரீகுமரன் புஸ்பநாயகி குடும்பம்
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் திரு.ஆர்.மதிவண்ணன்
கனடாவில் வசிக்கும் விக்னேஸ்வரன் விஜிதா குடும்பம்
அமெரிக்காவில் வசிக்கும் திரு.வாமதேவன் அமர்நீதி
கனடாவில் வசிக்கும் திரு திருமதி ஏகாம்பரம் விஜயலட்சுமி குடும்பம் மற்றும் இலண்டனில் வசிக்கும்
திரு.திருமதி தனபாலசிங்கம் விஐயராணி குடும்பம்
கனடாவில் வசிக்கும் சாராசாயி நேசி குடும்பம்
கனடாவில் வசிக்கும் திரு.கோபால் பகீரதன் குடும்பம்
இலண்டனில் வசிக்கும் திரு.கே.சுதர்சன் குடும்பம்
இத்தாலியில் வசிக்கும் அன்ரன் றோமன், எட்மன்ட் றூபினா குடும்பம்
இலண்டனில் வசிக்கும் துஸ்யன் பிரிதிவராஜ் குடும்பம்.