சாரதா நிலைய மாணவிகளின் தைத்திருநாள் கொண்டாட்டம்..
உழவர்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்துழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியைத் தெரிவிக்கும் நாளே தைப்பொங்கல் தினமாகும். இந்நாள் உலகெங்கிலுமுள்ள தமிழர்களால் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் வெகு விமரிசையாக பொங்கல் விழா அனுஷ்டிக்கப்பட்டது. அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் முகாமையாளர் உள்ளிட்ட அனைத்து சேவையாளர்களும், சாரதா நிலைய மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இம்மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டமை சிறப்பானதாகும்.
இதற்கான அனுசரணையை வழங்கிய எமது அறக்கட்டளை உறவுகளுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.







