அகல்வது அறம், ஒளிர்வது ஒளி, பகிர்வது பரம்பொருள்….
அந்தவகையில், பழையன கழிதலும் புதியன புகுதலும் எனும் கூற்றிற்கிணங்க பாரபட்சமின்றி வறுமை, இல்லாமை, இயலாமை என அனைத்தையும் கழித்து அனைவரது இல்லங்களிலும் நல்லொளியை ஏற்றுவதற்கு எம்மாலான பங்களிப்பினை வழங்குவது இன்றியமையாதது.
அதனடிப்படையில், எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் தீபாவளி தினத்தை முன்னிட்டு விசேட தேவையுடைய சிறுவர்களிற்கான புகலிடம் நிலையத்தில் உள்ள சிறார்கள் , நந்தவனம் முதியோர் இல்லத்தில் உள்ள தனித்துவிடப்பட்ட முதியோர்கள், மயிலம்பாவளி வாழும் கலை நம்பிக்கை நிதியத்தின் சிறுவர்கள், ஜீவானந்தா மகளிர் இல்லத்தில் வசிக்கும் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் என எமது செயற்பாடுகளுடன் இணைந்தவர்களிற்கான உலர் உணவுப் பொதிகள், உடைகள், இனிப்புகள், விசேட உணவு, சத்துணவுப் பொதிகள் என்பவற்றை நாம் வருடாந்தம் வழங்கி வருகின்றோம்.



ஆதலால், எமது திட்டங்களின் மூலமாக பயன்பெறும் அனைவர்க்கும் புத்தாடை எனும் கருப்பொருளில் நாம் முன்னெடுக்கும் செயற்பாட்டில் எம்முடன் இணைந்து பயணிப்பதன் மூலம் தேவைப்பாடுடைய ஒருவரின் தீபாவளியில் நீங்களும் ஒளியேற்றலாம்
மேலதிக விபரங்களுக்கு,
https://wa.me/94777105569
www.vcf.lk
Departing is virtue, shining is light, and sharing is divine…
In that spirit, as the saying goes “Let the old fade away and the new begin,” it is our moral duty to help dispel poverty, deprivation, and helplessness — bringing light into every home without discrimination.
Accordingly, with the support of our diaspora well-wishers, our foundation annually distributes dry ration packs, clothing, sweets, special meals, and nutritious food packs to children residing in special care homes, the elderly at Nandhavanam Elders’ Home, the children of the Mayilampavaly Living Arts Trust, and the students and elders at Jeevananda Women’s Home — all of whom are connected with our ongoing charitable initiatives.



Therefore, under the theme “New Clothes for All,” we invite you to join hands with us in this noble cause, helping to brighten the Deepavali (Diwali) of those in need.
For more information:
📞 https://wa.me/94777105569
🌐 www.vcf.lk