The Vivekananda Community Foundation actively supports children’s homes and shelters through various impactful initiatives. These efforts include providing nutritious meals, distributing educational supplies, and gifting new clothing during festivals. With strong backing from diaspora communities, the Foundation ensures these programs bring hope to underprivileged children.
We deeply appreciate our international supporters, who generously collaborate with us to improve society. Their unwavering dedication drives our ability to implement these meaningful initiatives.
This Christmas, the Foundation organized a special initiative to provide new clothes to young girls at the Kalaa Ashram in Mayilampavaly. The gesture honored the memory of Mr. Reji Rajaretnam and Mrs. Princi Rajaretnam, whose compassion continues to inspire. Mr. Jerry Rajaretnam from London sponsored this initiative, extending his heartfelt support through the Foundation.
The Vivekananda Community Foundation sincerely thanks Mr. Jerry Rajaretnam for his generous contribution. We wish him and all our supporters a joyful Christmas and a prosperous New Year.
Through compassionate actions, we aim to bring smiles and hope to children in need. With your continued support, we look forward to expanding our efforts and creating a brighter future for these children.
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சிறுவர் இல்லங்கள் மற்றும் காப்பகங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் தொடர்ந்து பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் விசேட உணவு வழங்குதல், கற்றல் உபகரணங்களை வழங்குதல் மற்றும் விசேட தினங்களில் உடை வழங்குதல் போன்ற பல நடவடிக்கைகள் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அதனடிப்படையில் சமூக நலனுக்காக எம்முடன் இணைந்து பயணிக்கும் அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் எமது முதற்கண் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதன் ஒரு செயற்பாடாக, இவ்வருடம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு மயிலம்பாவளி வாழும் கலை ஆசிரமத்தில் வசிக்கும் சிறுமிகளுக்கான புதிய ஆடைகள் வழங்கப்பட்டன.
இச்செயற்பாடானது , திரு. ரெஜி ராஜரெட்ணம் மற்றும் திருமதி.பிரின்சி ராஜரெட்ணம் அவர்களின் நினைவாக, இலண்டனில் வசிக்கும் திரு. ஜெரி ராஜரெட்ணம் அவர்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திரு.ஜெரி ராஜரெட்ணம் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலதிக தகவல்களுக்கு https://vcf.lk/needs