சிட்டுப் பூச்சிகளான சிறுவர்களை நாம் மகிழ்விப்போம்

உலகின் மாற்றங்களோ உளவியல் தாக்கங்களோ எதுவுமே தெரியாமல் இன்பமாய் வாழ வேண்டும் என சிறுவர்களிற்காகவே ஒரு சர்வதேச தினம் ஒக்டோபர் 1. உலக சிறுவர்கள் தினத்தில் அவர்களை நாமும் மகிழ்விப்போம்.

பல்வேறு கஸ்டமான குடும்ப சூழ்நிலைகளில் இருந்து பாலர் பாடசாலைகளில் கற்கும் சிறுவர்களிற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க எம் அறக்கட்டளை உறவுகள் 5 பாடசாலைகளை பொறுப்பெடுத்து நாம் நடாத்த உதவிக்கொண்டிருக்கின்றன.

இந்த வயதில் அவர்கள் மனதில் உள்ள அந்த மகிழ்வு தான் எதிர்காலத்தில் அவர்களின் மனநிலையும் நடத்தையும் ஆகவே எமது திட்டதில் உள்ள 5 பாடசாலை சிறுவர்களையும் ஒன்றாக இணைத்து ஒரு சுற்றுலாவும் அதனுடன் அன்றைய தினம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்த அவர்களுக்கான பரிசுப் பொருட்களை வழங்குவதுடன், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் சின்னஞ்சிறுசுகளின் கலை நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே இராமகிருஷ்ண மிஷனில் வழிபாட்டு ஒன்றுடன் ஆரம்பித்து, எமது விவேகானந்த பூங்கா, கல்லடி பாலம், மட்டக்களப்பு கோட்டை என்று பல இடங்களை சுற்றிக்காட்டி முழு நாள் அவர்களை மகிழ்வடையச் செய்யவுள்ளோம்.

120 சிறுவர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்களுக்கு தேவையான நிதியுதவி

போக்குவரத்து 35,000
சிற்றுண்டி, குளிர்பானம் 18,000
பரிசுப்பொருட்கள் 24,000

மொத்தமாக 77,000 தேவையாகவுள்ளது.

உதவ முடிந்தவர்கள் தொடர்புகொள்ளவும்.
https://wa.me/94777105569

கடந்த வருடம் எமது உறவுகளின் உதவியினால் மேற்கொள்ளப்பட்ட சிறுவர் தின நிகழ்வின் ஞாபகங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *