அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா
சமூக மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பின்தங்கிய பிரதேசமான முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 2019 ஆம் ஆண்டு அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தை நிறுவி விசேட உணவு பாடசாலைக்குப் பின்னரான பிரத்தியேக வகுப்புக்கள் விசேட தினங்களில் மாணவிகளுக்கான உடைகள் கற்றலுக்கான உபகரணங்கள் என மாணவிகளுக்கான பல செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வந்த நிலையில் இன்று 61 மாணவிகளின் கல்வி பயணத்திற்கு உறுதியான ஆதாரமாக விளங்கி வருகிறது.
இவ்வாறான நிலையில் இதுவரை வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு அதன் மீது அக்கறை கொண்ட பல்வேறு தரப்பினரின் முயற்சியினாலும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நல்உள்ளங்களின் நிதி அனுசரணையினாலும் அரசாங்கத்தினால் காணி வழங்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு 04.03.2026 அன்று அதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.












அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் தலைவர் திரு.பொன்.பேரின்பநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராமகிருஷ்ணமிஷன் இலங்கைக்கிளையின் தலைவர் ஸ்ரீமத் அக்க்ஷராத்மானந்தஜீ மஹராஜ் மற்றும் இராமகிருஷ்ண சாரதாமிஷன் இலங்கைக்கிளையின் தலைவி ப்ரவ்ராஜிகா ஆத்மதேவ ப்ராணா ஆகியோர் ஆத்மீக அதிதிகளாக வருகை தந்ததுடன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்.திரு.இ.விஜயகுமார் அவர்கள், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி.ப.சத்தியரூபன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.











அன்னை ஸ்ரீ சாரதையின் இல்லம் திறந்து வைக்கப்பட்டு பூஜைகளும் நடாத்தப்பட்டதோடு வகுப்பறைகள், கணினி அறைகள், நூலகம், சாப்பாட்டு அறை போன்றனவும் திறந்துவைக்கப்பட்டது.























கௌரவ அதிதிகளாக வைத்தியகலாநிதி வே.பரமநாதன் (இலண்டன்), எந்தரி.கு.அருணகுமார்(இலண்டன்) மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கும் மேலாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத் தலைவர், அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் உறுப்பினர்கள், மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் விவேகானந்த குடும்ப சேவையாளர்களும் கலந்து கொண்டனர்.






இந்நிலையத்தில் கல்விமேம்பாடு, திறன்விருத்தி, இயற்கை விவசாயம், உற்பத்தித்துறை ஆகிய செயற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதோடு மாணவர்களுக்கான தங்குமிட வசதி மற்றும் கலாசார மண்டபம் போன்றவை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை தொடர்பில் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கும் அதன் திறப்பு விழாவிற்கும் உறுதுணையாக செயற்பட்ட நன்கொடையாளர்கள் வைத்தியகலாநிதி வே.பரமநாதன் (இலண்டன்), எந்தரி.கு.அருணகுமார்(இலண்டன்), விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் ஆகியோர் மற்றும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் தலைவர், முகாமையாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோரும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






இந்நிகழ்வில் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் ஆரம்பகால கட்டம் முதல் இன்று வரை நடைமுறைப்படுத்த செயற்பாடுகள், மாணவர்களின் அடைவுமட்டங்கள், மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளடங்கலாக “மங்கையர் எழுச்சி” நூல் வெளியிடப்பட்டதோடு பிரதிகளும் முகாமையாளரால் வழங்கி வைக்கப்பட்டது.









இச்செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு எமது அறக்கட்டளையினூடாக தமது அனுசரணையை வழங்கிய அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை நிர்வாகம் பெருமிதம் கொள்கின்றது.







New Building Opening Ceremony of Annai Sri Saradha Center – Education Support for Girls in Mullaitivu
The Vivekananda Community Foundation, which carries out activities to strengthen social change, established the Annai Sri Saradha Center in 2019 at Puthukkudiyiruppu in Mullaitivu, a disadvantaged region. Since its establishment, the center has been implementing various activities for girls such as providing special meals, after-school special classes, clothing for students on special occasions, and learning materials. Today, the center serves as a strong support for the educational journey of 61 female students.
Until now, the Annai Sri Saradha Center had been functioning in a rented building. With the efforts of many well-wishers who showed concern for the center, financial support from donors living in foreign countries, and land allocated by the government, a new building was constructed. The opening ceremony of the new building was successfully held on 04.03.2026.
The event was held under the leadership of Mr. Pon. Perinbanayagam, Chairman of the Annai Sri Saradha Center. Srimat Aksharathmanandaji Maharaj, President of the Ramakrishna Mission Sri Lanka branch, and Pravrajika Atmadeva Prana, Head of the Ramakrishna Sarada Mission Sri Lanka branch, attended as spiritual guests.
The Divisional Secretary of Puthukkudiyiruppu, Mr.I.Vijayakumar, and the Medical Officer of Health, Dr. P. Sathyarupan, participated as special guests.
During the ceremony, the Annai Sri Saradha Center building was officially opened and religious poojas were conducted. The classrooms, computer room, library, and dining hall were also declared open.







It was also explained that activities such as educational development, skill development, natural farming, and production-related programs will be implemented at the center. In the future, plans include hostel facilities for students and the construction of a cultural hall.
Donors and supporters who contributed to the completion of the new building and the opening ceremony were honored with mementos. These included Dr. V. Paramanathan (London), Engineer K. Arunkumar (London), and Mr. K. Pratheeswaran, Executive Director of the Vivekananda Community Foundation. The Chairman, Manager, and Technical Officer of the Annai Sri Saradha Center were also honored.
At the event, a book titled “Mangaiyar Ezhuchi” was also released. The book includes the history of the center from its early stages until today, the activities implemented, the achievements of the students, and future plans. Copies of the book were distributed by the manager.
The administration of the Vivekananda Community Foundation expresses its sincere gratitude to all donors who provided their support through the foundation to carry out this initiative.
