விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மாணவியின் அனுசரணையில் புகலிட மாணவர்களுக்கான சத்துணவுப்பொதிகள்
விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுத்து வரப்படுகின்ற சமூக மாற்றத்திற்கான பல்வேறு திட்டங்களில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான புகலிடம் ஒரு முக்கியமான செயற்றிட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயின்ற மாணவி செல்வி.சற்குணராஜா டிசன்யா அவர்களின் அனுசரணையில் புகலிடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான சத்துணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.


விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் Office management & IT பாடநெறியைப் பூர்த்தி செய்து அதற்கான களவிஜயம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இம் மாணவி புகலிடத்தின் மாணவர்களுக்கான சத்துணவுப் பொதிகளை வழங்க முன்வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இச்செயற்பாட்டிற்காக விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக தமது அனுசரணையை வழங்கிய செல்வி.சற்குணராஜா டிசன்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நாம் எமது அறக்கட்டளை மற்றும் கல்லூரி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Nutritional Food Packages Provided to Puhalidam Students with the Support of a Student of Vivekananda College of Technology
Through the Vivekananda Community Foundation, several initiatives aimed at social transformation are being carried out, among Puhalidam, where the students with special needs is being implemented as a key project.
In this regard, nutritional food packages were distributed to the students studying at the Puhalidam with the sponsorship of Ms.S.Disanya Sargunarajah, a former student of our Vivekananda College of Technology .
After successfully completing the Office Management & IT course atVivekananda College of Technology and undergoing the relevant field training, this student’s willingness to extend her support by providing nutritional food packages to the shelter students is truly commendable.
On behalf of the Vivekananda Community Foundation and the College, we extend our heartfelt gratitude to Ms. S. Disanya Sargunarajah and her family for their generous sponsorship and support in carrying out this initiative.



