கரடியனாறு மனிதநேயம் சமுதாய கல்லூரியில் ஆங்கில மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டம்
கரடியனாறு மனிதநேயம் சமுதாய கல்லூரியில் ஆங்கில மேம்பாட்டு நிகழ்ச்சி திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் திட்டத்தின் கீழ், மனித நேயம் அறக்கட்டளையின் முழு நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்ச்சி, தரம் 1 முதல் தரம் 5 வரை உள்ள மாணவர்களுக்கு ஆங்கில மொழிக் கல்வியை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே 49 மாணவர்கள் வருகை தந்து தங்களது கற்றல் பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



தொடக்க அமர்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பற்றிய விளக்கம், மாணவர் அறிமுகம் மற்றும் ஆங்கில பாடநெறி தற்காலத்தில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பது தொடர்பிலான முழுமையான வழிகாட்டல் (Orientation) இடம்பெற்றது. இதன்மூலம், மாணவர்களுக்கு செயல்முறை மற்றும் செயற்பாடு அடிப்படையிலான கற்றல் சூழல் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, கரடியனாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பெற்றோர் பெருமளவில் கலந்து கொண்டு, நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நோக்கங்கள் குறித்து பெற்றோர் வெளிப்படுத்திய ஆர்வமும், ஈடுபாடும், இப்பகுதி சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கான உறுதியை வெளிப்படுத்துகிறது.




இந்த 49 குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே அத்தியாவசியமான ஆங்கிலத் திறன்களை வழங்குவதன் மூலம், மனித நேயம் சமூதாய கல்லூரி மற்றும் மனித நேயம் அறக்கட்டளை இணைந்து, இந்த கிராமப்புறப் பகுதியில் நீடித்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைத்து வருகின்றன.
English Language Development Programme at Karadiyanaru Manitha Neyam Community College
The English Language Development Programme has been officially inaugurated at Karadiyanaru Humanitarian Community College. Under a project of Vivekananda College of Technology, this programme is being implemented with full financial support from the Manitha Neyam Trust, with the objective of providing English language education to students from Grade 1 to Grade 5.
Notably, on the very first day of the programme, 49 students attended and commenced their learning journey. The inaugural session included an introduction to Vivekananda College of Technology, student introductions, and a comprehensive orientation highlighting the importance of English language education in the present context. Through this session, a practical and activity-based learning environment was successfully introduced to the students.





A key highlight of the programme was the significant participation of parents from Karadiyanaru and surrounding villages, who attended the event in large numbers and actively engaged with the proceedings. The interest and involvement shown by the parents regarding the objectives of the programme reflect the community’s strong commitment to educational advancement in the region.
By providing these 49 children with essential English language skills at an early age, the Manitha Neyam Community College and the Manitha Neyam Trust , working together through Vivekananda Community Foundation, are laying a strong foundation for sustainable development and long-term progress in this rural area.
