விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நன்கொடையாளர் கல்லூரிக்கு வருகை

சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் பல்வேறு மனிதநேய மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், எமது அறக்கட்டளையின் ஆரம்பகாலத்திலிருந்தே எமது செயற்பாடுகளுடன் இணைந்து நிதி அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் கனடாவில் வசிக்கும் திரு.இளையதம்பி ஏகாம்பரம் அவர்களும், திருமதி விஜி ஏகாம்பரம் அவர்களும், இலண்டனில் இருந்து வருகைதந்த மாணிக்கப்பிள்ளையார் பாலர் பாடசாலையின் நன்கொடையாளர் திரு.வேலுப்பிள்ளை சிவசுந்தரம், மற்றும் கொழும்பில் இருந்து இவர்களின் நண்பர் திரு. சின்னையா ரட்ணவடிவேல் ஆகியோரும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு வருகை தந்து, அவர்களுடைய நிதி அனுசரணையின் கீழ் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களையும், கல்வி கற்று தற்போது பயனடைந்தவர்களையும் சந்தித்ததுடன், கல்லூரி மாணவர்களையும் சந்தித்தனர்.

இந்நிகழ்வின் போது, கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இவர்கள் நேரடியாக எமது செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், எதிர்காலத்தில் எவ்வாறு இணைந்து செயற்படலாம் எனவும், செயற்பாடுகளுக்கான உதவிகளை தொடர்ச்சியாக வழங்குவதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் அனுசரணையின் கீழ் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் பாடசாலை மாணவர்களும் மாதாந்த ஊக்குவிப்புத்தொகை பெற்றுக்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுக்கொண்டதோடு தமது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டமை சிறப்பானதாகும்.

A Special Visit by Vivekananda Community Foundation’s Donors to VCOT

The Vivekananda Community Foundation is working with the aim of social development. With the support of our expatriate donors, the Foundation is carrying out many humanitarian and educational projects.

From the beginning of our Foundation, Mr. Ilayathambi Ekambaram and Mrs. Viji Ekambaram from Canada have been continuously providing financial support for our activities. Recently, they visited the Vivekananda College of Technology. They were joined by Mr. Veluppillai Sivasundaram from London, who is also a donor of Manikkapillaiyar Preschool, and their friend Mr. Sinnaiya Ratnavadivel from Colombo.

During their visit, they met the students who are studying under their sponsorship and also those who have successfully completed their education with their support. They also met and interacted with the students of the college.

The guests were warmly welcomed under the leadership of the College’s Executive Director, Mr. K. Pratheeswaran. They were honoured and presented with mementos in appreciation of their valuable contribution.

The visitors observed our activities directly and discussed how they can continue to support and work together with us in the future.

School students who are studying under the sponsorship of Mr. I. Ekambaram and university students who are receiving monthly scholarships also took part in the event. They received gifts and shared their experiences, making the event more special and meaningful.

Similar Posts