|

‘Plant Talk’ – செயற்கை நுண்ணறிவு மூலம் தாவரங்களுடன் உரையாடும் புதிய கற்றல் அனுபவம்

வளர்ந்து வரும் சிறுவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான அறிவை அறிமுகப்படுத்தும் நோக்கில், தாவரத்தின் தேவைகளை அடையாளம் கண்டு அவற்றை AI உதவியுடன் மனிதர்களுடன் உரையாடும் வகையில் வெளிப்படுத்தும் வகையில் தாவரங்களுக்கு தேவையான நீர், காற்று மற்றும் சூரிய ஒளி ஆகியவை சரியான அளவில் கிடைக்காதபோது, அதனை தாவரமே மனிதர்களுக்கு தெரிவித்தால் எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு ‘Plant Talk’ எனும் செயற்றிட்டம் தொடர்பான செயன்முறை பரிசோதனை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இச்செயற்றிட்டத்தை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர் திரு. R. Joel Roshan அவர்கள் முழுமையாக வடிவமைத்துள்ளார். இதற்கு உதவியாக கல்லூரியின் பயிலுனர் பணியாளர் சங்கீர்த் அவர்கள் செயற்பட்டார்.

மாணவர்களுக்கு வெறுமனே கோட்பாட்டு அறிவை வழங்குவதற்கு பதிலாக, AI மற்றும் தொழில்நுட்பத்தை நடைமுறைச் செயற்பாடுகளுடன் இணைத்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த பரிசோதனை அமைந்திருந்தது.

‘கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்’ என்ற தொனிப்பொருளின் கீழ், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பின்தங்கிய கிராமப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்காக பல்வேறு செயற்றிட்டங்களை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை முன்னெடுத்து வருகின்றது. அதற்கிணங்க, மாதிரி கிராமமாகத் தெரிவுசெய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தில் கடந்த நான்கு வருடங்களாக, அப்பகுதி மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தரம் 2 முதல் 11 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு, பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னர் ஆங்கிலம் மற்றும் சிங்கள பாடங்களுக்கான மாலை நேர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வரை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு தொடர்ச்சியாக கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்று வரும் மாணவர்களை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு அழைத்து வந்து, ‘Plant Talk’ AI பரிசோதனை நேரடியாகச் செய்து காண்பிக்கப்பட்டது. இதன் போது திறமையாக செயற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

தாவரங்களின் வளர்ச்சி, அவற்றின் தேவைகள் மற்றும் அவற்றை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் புரிந்துகொள்ளும் முறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு அறிமுகம் வழங்கப்பட்டதுடன், AI தொழில்நுட்பத்தை கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கையுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிய விதம் தொடர்பிலும் ஆரம்பகட்ட புரிதல் ஏற்படுத்தப்பட்டது.

பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் நடைமுறை அறிவியல் அனுபவங்களை வழங்குவதன் மூலம், அவர்களின் கற்றல் ஆர்வத்தையும் எதிர்கால திறன்களையும் மேம்படுத்தும் வகையில் இத்தகைய செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை ஆகியவற்றின் சமூக மற்றும் கல்விசார் செயற்பாடுகளின் ஊடாக, பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் புதிய தொழில்நுட்ப உலகை அறிமுகப்படுத்தி, அவர்களின் எதிர்காலத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘Plant Talk’ – Introducing Students to Artificial Intelligence Through an Interactive Plant Experiment

With the aim of introducing children to modern technology and Artificial Intelligence (AI), a practical experiment titled ‘Plant Talk’ has been designed around an innovative concept that enables plants to identify their needs and communicate them to humans with the assistance of AI technology.

The experiment is based on a simple yet thought-provoking idea: What if a plant could tell humans when it does not receive the right amount of water, air, or sunlight that it needs to grow?

The ‘Plant Talk’ project was fully designed by Mr. R. Joel Roshan, Resource Person at Vivekananda College of Technology, with the support of Sankeerth, a trainee staff member of the College.

Rather than limiting students to theoretical knowledge, the experiment was designed to provide them with an opportunity to learn by connecting AI and modern technology with practical activities and hands-on scientific experiences.

Under the theme ‘Empowering Villages for Transformation’, the Vivekananda Community Foundation has been implementing various initiatives for people living in underprivileged rural communities and below the poverty line. Accordingly, a range of social, educational and skills-development activities have been carried out over the past four years in Mavilangathurai, which was selected as a model village, based on the needs of the local community.

As part of these ongoing efforts, evening classes in English and Sinhala have been conducted after school hours for students from Grade 2 to Grade 11 at Mavilangathurai Vigneshwara Vidyalayam. These classes continue to support the students’ educational development and learning opportunities.

As part of this initiative, the students who have been continuously participating in educational and skills-development activities were brought to Vivekananda College of Technology, where the ‘Plant Talk’ AI experiment was demonstrated to them directly.

The students were introduced to plant growth, the basic needs of plants, and ways in which modern technology can be used to understand and respond to those needs. They were also given an introductory understanding of how AI technology can be connected with education and everyday life in practical and meaningful ways.

Initiatives of this nature are particularly important in providing students from underserved rural communities with exposure to modern technology, Artificial Intelligence and practical scientific experiences. Such opportunities can help nurture their curiosity, strengthen their interest in learning, and prepare them with skills relevant to their future.

Through the social and educational initiatives of Vivekananda College of Technology and the Vivekananda Community Foundation, continuous efforts are being made to introduce students from underserved rural communities to the rapidly evolving world of technology and create new opportunities for their future.

Similar Posts