எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது இல்லங்கள் மற்றும் சிறுவர் காப்பகங்களுக்கான பங்களிப்பினை வழங்கும் முகமாக அவர்களுக்கான விசேட உணவு, விசேட தினங்களில் அவர்களுக்கான உடை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை எமது புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம். ஆகையால், இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க எம்முடன் இணைந்து பயணிக்கும் எமது புலம்பெயர் உறவுகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அதன் பிரகாரம் ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்டபுதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் காணப்படும் ஜீவானந்தா பெண்கள் காப்பகமானது 13 சிறுமிகள் மற்றும் 10…