Platform for Inner Excellence

உள்ளார்ந்த ஆளுமைக்கு ஓர் களம்..

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசிக்கும் பின்தங்கிய மாணவர் சமுதாயத்தை மையப்படுத்தி நடைமுறைத்தப்படும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் மாணவிகள் கல்வியோடு மாத்திரம் நின்றுவிடாது , யோகா, கராத்தே என இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தம்மை முன்னிலைப்படுத்தி வருகின்றனர். அதனடிப்படையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்தும் யோகாப் போட்டியானது புதுக்குடியிருப்பு…

மேலும் படிக்க
Stones and Words

கற்களும் சொற்களும் கல்விக்கான அறிவுத்தளம்..

இலண்டன் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயமானது, விவேகானந்த சமுதாய அறக்கட்டளையுடன் இணைந்து சமூக முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களில் தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. அதன் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஆலயத்தின் பொருளாளர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு வருகைதந்தமை குறிப்பிடத்தக்கது. எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட சமூக மற்றும் கல்வி…

மேலும் படிக்க

இயற்கையை பாதுகாப்பதே எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அடிப்படை

இயந்திர மயமாக்கப்பட்ட இன்றைய உலகில் எதிர்கால சந்ததிக்கு மாசுக்களற்ற புதிய சூழலொன்றை வழங்குவதற்கு இன்றைய இயற்கையைக் காப்பதொன்றே வழிமுறையாகும். அதனை உணர்த்தும் வகையில் சர்வதேச சுற்றுச்சூழல் தினம் (World Environmental Day) ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் திகதி உலகளாவிய ரீதியில் நினைவுகூரப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, எமது Vivekananda College of Technology (VCOT) மற்றும் Amirda நிறுவனமும் இணைந்து “கழிவுப்பொருட்களின் மீள்பயன்பாடு (Waste Recycling)” என்ற செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது. இதற்கான காரணம், இலங்கையில் நாள் ஒன்றுக்கு திண்மக்கழிவாக…

மேலும் படிக்க
தன்னம்பிக்கையும் உழைப்புமே நாளைய முதலீடு

தன்னம்பிக்கையும் உழைப்புமே நாளைய முதலீடு

அபிவிருத்தியடைந்து வரும் எமது இலங்கை நாட்டின் இன்றைய காலகட்ட சூழ்நிலையானது இயற்கை அனர்த்தங்கள் மற்றும் யுத்தத்தின் பாதிப்புக்களையும் தாண்டிய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயத்தை மையப்படுத்தியதாக காணப்படுகின்றது. இதனால் மாதாந்த வருமானத்தைக் காட்டிலும் அதிகரித்த பொருட்களின் விலையிலே பல்வேறு குடும்பங்களின் சுமையான எதிர்காலம் தங்கியிருக்கின்றதென்பது மறுக்க முடியாத உண்மையாகும். பொருளாதார மையமான நாடாக காணப்பட்ட இலங்கையில் இன்று பொருத்தமான வேலை வாய்ப்பின்மை, அரசாங்க வேலை வாய்ப்புக்களை எதிர்ப்பார்த்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கி இன்றைய இளைஞர்…

மேலும் படிக்க
Encouraging Future Karate Champions

இன்றைய மேடைகள் ; நாளைய களங்களுக்கான அடித்தளங்கள்….

முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ சாரதா நிலையமானது 2020 இல் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் ஸ்தாபிக்கப்பட்டு இன்று மாணவிகளை வலுவூட்டும் பாரியளவான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் புலம்பெயர் உறவுகளின் அனுசரணையுடன் விசேட உணவு, ஆடைகள், பிரத்தியேக வகுப்புகள், கராத்தே, யோகா பயிற்சி என இன்று 60 மாணவிகளுக்கான தமது செயற்பாட்டை சாரதா நிலையம் முன்னெடுத்து வருகின்றது. அதனடிப்படையில் இலங்கை கராத்தே சம்மேளனத்தின் 50 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு புதுக்குடியிருப்பு மத்திய…

மேலும் படிக்க
Amman Temple

கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் அதன் தாயக சேவைகளும்

இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயமானது கடந்த 30 வருடங்களாக ஆலய நிதியின் மூன்றில் இரண்டு பகுதியினை இலங்கையில் வடகிழக்கு மற்றும் மலையபகுதிகளில் காணப்படுகின்ற எமது மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற பல்வேறு மனிதாபிமான சேவைகளுக்கு வழங்கி வருகின்றது. அதன் அடிப்படையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை ஊடாகவும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதனடிப்படையில் முல்லைதீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பில் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தினை ஆரம்பித்து வைத்து அதற்கான மாதாந்த உதவிகள் மற்றும் ஏனைய சமூகச் செயற்பாடுகள்,…

மேலும் படிக்க
Livelihood Support

வலுவூட்டலை நோக்கிய வாழ்வாதார மேம்பாட்டிற்கு..

எமது சமூகத்தின் மேம்பாட்டிற்காக கல்வியை மட்டுமல்லாது, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் தேவைப்பாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களுக்கான வலுவூட்டலை வழங்குவதே எமது நோக்கமாகும். அதனடிப்படையில் எமது மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டற் செயற்பாட்டினூடாகத் தெரிவு செய்யப்பட்டு எமது அறக்கட்டளையினூடாகப் பொறுப்பெடுக்கப்பட்ட மாணவி ஒருவரின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவி எமது நன்கொடையாளரான திரு. ரகுபதி நடராஜா அவர்களினால் எமது அறக்கட்டளையினூடாக வழங்கிவைக்கப்பட்டது. அவர்கள் வாழ்வாதாரமாகப் பயிர்ச்செய்கை மேற்கொள்வதையடுத்து அதன் மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு பயிர்ச்செய்கைக்கான நீர் வசதியைப்…

மேலும் படிக்க

படிகளாக்கலாம் தடைகளின் கல்லையே..!

மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப் பொருளின் கீழ், விவேகானந்த சமுதாய அறக்கட்டளை முன்னெடுத்து செயற்படுத்தும் மாணவர்களைப் பொறுப்பெடுக்கும் திட்டமானது கடந்த 5 ஆண்டுகளாக 150 மாணவர்களை உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இத்திட்டத்தின் வழியாக, மேலும் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நோக்குடன், எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதன் மூலம் அவர்களது கல்வியில் இடைநிறுத்தம் ஏற்படாமல் தடுப்பதே எமது முக்கிய நோக்கமாகும். அந்த வகையில்,…

மேலும் படிக்க
og

நினைவு தினத்தை முன்னிட்டு பாடசாலைக்கான வெற்றிக்கிண்ணங்கள்

“கிராமங்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” என்னும் தொனிப்பொருளில் தெரிவு செய்யப்பட்ட மாவிலங்கத்துறை கிராமத்தில் உயர்தரம் கல்வி கற்கும் மாணவர்களிற்கான மாதாந்த உதவித்திட்டம், அடிப்படைக் கணிணி வகுப்புகள், அறநெறிக்கான கல்வி உபகரணங்கள், வாழ்வியல் பயிற்சி செயலமர்வுகள், சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசுப்பொருட்கள் என எமது எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில், எமது நீண்டநாள் நன்கொடையாளராகிய திரு.கோபாலு பகீரதன் அவர்களின் தாயாராகிய திருமதி.அன்னபாக்கியம் கோபாலு அவர்களின் 4ம் ஆண்டு…

மேலும் படிக்க
Environmental Activities

இயற்கை அன்னைக்கான எமது பங்களிப்பு ..!

எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக சமூக மாற்றத்திற்கான வலுவூட்டலுக்காக சமூகம் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.அந்த வகையில் பசுமைப் புரட்சித் திட்டம் எனும் தொனிப்பொருளில் சுற்றாடலை மையப்படுத்தியதாக பல்வேறு செயற்றிட்டங்களை எமது சுற்றாடல் மேம்பாட்டுப் படையணியினூடாக முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தின் 3ம் குறிச்சி கடற்கரைப் பிரதேசத்தில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இணைப்பாளர் திருமதி.ரஜனி பாஸ்கரன் அவர்களின் தலைமையில்…

மேலும் படிக்க