வருடாந்தம் வரும் பல திருவிழாக்களும், சமய கொண்டாட்டங்களும், விசேட நிகழ்வுகளும் பலருக்கு கொண்டாட்டமாக அமைந்தாலும் இவ்வாறான நிகழ்வுகளை திண்டாட்டமாக கடந்துசெல்ல எந்தனிக்கும் பலரும் உள்ளனர்.
பொருளாதார சூழ்நிலை மற்றும் வருமானமின்மை காரணமாக பல வீடுகளில் இந்த விசேட நிகழ்வுகள் பக்கத்து வீட்டு பட்டாசி சத்தத்துடனும், இருக்கும் உறவுகள் கொடுக்கும் இனிப்புடனும் அமைதியாக முடிந்துவிடுகின்றது.
நாமும் வருடாந்தம் எமது அன்னை சாரதா நிலையத்தின் குழந்தைகளுக்கு புத்தாடைகள் எமது நன்கொடை உறவுகள் மூலமாக வழங்கி வைப்பது வழமையான விடயமாகும்.
இம்முறையும் அதற்கான உதவிகள் கிடைத்தாலும், இவ்வருடம் எமது அறக்கட்டளையின் அன்புள்ளங்களின் நிதியுதவிகள் மூலம் நடைபெறுகின்ற பாலர் பாடசாலைகளின் சிறார்கள், கல்விக்காக பொறுப்பெடுக்கப்பட்ட மாணவர்கள், விசேட தேவையுடைய மாணவர்கள், வயோதிப மடத்திலுள்ள அதரவற்ற பெற்றோர் என அனைவருக்கும் புத்தாடைகள் வழங்குவதற்கான உதவிகோரலை முன்வைக்கின்றோம்.
தீபாவளி தொடக்கம் புதுவருடம் வரை இந்த புத்தாடைகள் அன்பளிப்பு வழங்கப்படும். எனவே உதவிகள் மூலமாக கிடைக்கப்பெறுகின்ற நிதியுதவியினால் இவ்வாறானவர்களில் மிகவும் வறுமைநிலையில் உள்ள மற்றும் தேவையடையவர்களை அடையாளம் கண்டு அவர்களிற்கு வழங்கிவைக்கப்படவிருக்கின்றது.
இந்த உதவியானது கொண்டாட்டத்திற்காக அல்லாமல் திண்டாட்டத்தில் உள்ள எம் உறவுகளுக்கு வருடத்திற்கு ஒரு தடவையாவது புத்தாடைகள் கிடைக்கட்டும்.
தொடர்புக்கு : http://wa.me/+94776770780
மேலதிக தகவல்களுக்கு
க.பிரதீஸ்வரன்
நிறைவேற்று பணிப்பாளர்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
மட்டக்களப்பு.
+94777105569
[email protected]
www.vcf.lk
நன்கொடைகள் வழங்கிட






