தங்களிற்கு எமது பராமரிப்பின் கீழ் உள்ள இல்லங்களில் தங்கியுள்ள மாணவிகள், பாலர் பாடசாலையில் உள்ள சிறுவர்கள், விசேட தேவையுடையோர் நிலையங்களில் உள்ள உடல், உள வளர்ச்சி குன்றிய சிறார்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் உள்ள கைவிடப்பட்ட முதியவர்கள் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
உங்கள் விசேட நினைவு தினங்களில் நீங்கள் வழங்கும் உதவி மூலமாக இவர்களிற்கான ஒரு நாள் உணவு கிடைப்பதுடன் இவர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்கின்றது. இதற்காக உங்களிற்கான நல்வாழ்வினை இறைவன் வழங்குவார் என்பதுடன் நாமும் பிரார்த்தித்துக்கொள்கின்றோம்.
இழந்த உறவுகளின் நினைவான உங்கள் உதவியால் இவர்களும் வாழ்கின்றனர். எனவே அவர்களின் ஆத்மா சாந்திபெறுவதுடன் இறைவன் உங்கள் கவலைகளை மறப்பதற்கும் அதற்குரிய ஆறுதலையும் பலத்தையும் வழங்குவார்.
தாங்கள் விரும்பினால் உங்கள் விசேட நினைவு தினங்களில் ஒரு நாள் உணவு, சத்துணவு பொதிகள் மற்றும் உடைகள் என்பவற்றினை வழங்க முடியும். உங்கள் நினைவுதினத்தில் உங்கள் ஞாபகார்த்தமாக குறிப்பிட்ட இடங்களில் மரம் ஒன்றினையும் நடுவதன் மூலம் இந்த பூமி வெப்பமடைவதை குறைத்து இயற்கைக்கு உதவுவோம்.
நீங்கள் வழங்கும் உணவுடன் நாம் இவர்களிற்கான கல்வி, அறிவு, திறன், வாழ்வியல் மற்றும் அவர்களினை வலுப்படுத்த தேவையான அனைத்து விடயங்களையும் சேர்த்தே ஊட்டிவிடுகின்றோம். எனவே உங்கள் இந்த ஒரு நாள் உதவி இவர்களின் வாழ்நாள் வலுவூட்டல்….
இல்லாதவர்கள் வாழ்வதற்காக,
இருப்பதை கொடுப்போம்.
நன்றி.
இவ்வண்ணம்,
நிருவாகம்,
விவேகானந்தா சமுதாய அறக்கட்டளை,
மட்டக்களப்பு.
எம்மை தெரிந்துகொள்ளவும், தொடர்புகொள்ளவும்.
http://www.vcf.lk
vivekananda.cflk@gmail.com
One Day Meal Application Form :
ஒரு நாள் உணவு வழங்கும் விண்ணப்பப் படிவம்:
- Full Name of contributor ( Mr / Mrs / Miss ) :
நிதியுதவி வழங்குபவரின் முழுப் பெயர் ( திரு/ திருமதி/ செல்வி): - Residing country:
வசிக்கும் நாடு : - Date of food to be supplied:
உணவு வழங்கப்பட வேண்டிய திகதி : - The supply of food on whose name to be notified for the day meal :
உணவ வழங்கப்பட வேண்டியவரின் முழுப் பெயர் : - Any special reasons to give on behalf of the person ( Birthday / Wedding day
annual day of death / others) :
உணவு வழங்குவதற்கான காரணம் (பிறந்த நாள்/ திருமணன நாள்
இறந்தவரின் ஆத்ம சாந்திக்காக / வேறு ஏதும் நினைவாக) : - Your E-mail Address:
தங்களின் ஈமெயில் முகவரி : - Your Mobile Number:
தங்களின் செல்லிடப்பேசி இலக்கம்:
PROVIDING ONE DAY MEALS FOR CHILDREN IN NEED !
Please send the following details to
WhatsApp or Viber : https://wa.me/+94776770780
60 மாணவிகளிற்கு ஒரு நாள் உணவு வழங்க ரூபா 40,000
20 விசேட தேவையுடைய சிறுவர்களிற்கு சத்துணவு பொதி வழங்க ரூபா 60,000
15 முதியோர்களிற்கான உணவிற்கு நாள் ஒன்றிற்கு ரூபா 15000
நன்கொடைகள் வழங்கிட