ஒளியேற்றியோருக்கு நன்றிகள் கோடி..

விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து இருள் அகல ஒளி தேவை என்றும் தத்துவத்தை குறிப்பிட்டு ஒளியினால் கடவுளை வழிபடும் அந்த நாளினை தான் நாம் தீபாவளி என்று சொல்கிறோம்.

அந்த வகையில் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கடவுளை காண்தற்காக மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற வாக்கிற்கமைய எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் சமுதாயத்தில் உள்ள தேவையுடையோரை இனம் கண்டு அவர்களுடன் இணைந்து இம்முறை நாம் தீபாவளியை கொண்டாடி அவர்கள் மனங்களை குளிரசெய்தோம்.

அந்த வகையில் தீபாவளிக்கான உதவியினை எமது அறக்கட்டளை உறவுகளால் பொறுப்பெடுக்கப்பட்டு கல்விக்கான உதவிபெறும் வறுமைநிலையில் உள்ள மாணவர்களின் குடும்பங்கள், விசேட தேவையுடைய சிறுவர்களிற்கான புகலிடம் நிலையத்தில் உள்ள சிறார்கள் , நந்தவனம் முதியோர் இல்லத்தில் உள்ள தனித்துவிடப்பட்ட முதியோர்கள், முல்லைதீவு அன்னை சாரதா நிலையத்தில் உள்ள மாணவிகள் என எமது செயற்பாடுகளுடன் இணைந்தவர்களிற்கான உலர் உணவுப் பொதிகள், உடைகள், குடை, துவாய், போர்வைகள், இனிப்புகள், விசேட உணவு, சத்துணவுப் பொதிகள் என்பன அடையாளம் காணப்பட்ட அவசிய தேவையானவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாறான நிகழ்வுகளை நாம் முன்னெடுப்பதற்கு உறுதுணையாக இருந்து விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நன்கொடை வழங்கி எம்மவரின் மனங்களிலும் ஒளியேற்றி வைத்த அனைத்து நன்கொடை உள்ளங்களுக்கும் இந்த பயனைபெற்ற அனைவர் சார்பாகவும், எமது அறக்கட்டளை சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, நீங்களும் உங்கள் குடும்பமும் சகல சௌபாக்கியங்களும் பெற்று மனமகிழ்வுடன் வாழ் இறைவனை பிராத்திப்பதுடன் தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலதிகமாக தற்போது கிடைக்கப்பெற்ற உதவிகளுக்கு புதுவருடத்தினை முன்னிட்டு ஏனைய எமது சமூகம் சார்ந் செயற்பாடுகளுடன் தொடர்பானவர்களிற்கு திட்டமிட்டு வருகின்றோம். எனவே எமது அறக்கட்டளையின் சமூக மாற்றத்தினை நோக்கிய பயணத்தில் இவ்வாறான உதவிகள் பலரின் அவசிய தேவையினையும், ஏனையோர்போல் இந் நிகழ்வுகளை கொண்டாடிடும் ஒரு மனநிறைவினையும் தருகின்றது.

உதவி வழங்கியவர்கள் விபரம் :
01. திரு.எஸ்.ரங்கசுவாமி சரவணா குடும்பம், அமெரிக்கா
02 திரு.திருமதி.ஸ்ரீ குமரன் புஸ்பநாயகி குடும்பம். அமெரிக்கா
03 திரு.கோபாலு பகிரதன், கனடா
04 திருமதி.சிவசாமி, கனடா
05 திரு.ஸ்ரீதரன், இலண்டன்
06 திரு.அமர்நீதி வாமதேவன், அமெரிக்கா
07 திரு.காந்தரூபன், சுவிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *