இன்றைய நவீன யுகத்தில் அடிப்படைக் கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவு இன்றியமையாததொன்றாகும். சிறு வயது முதல் மாணவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் அடிப்படை கணினி பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ளுதல் அத்தியாவசியமானதாகும்.
இதற்காக முன்னேற்றகரமான ஒரு தொழில்நுட்ப அறிவுடனான சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் அடிப்படை கணினி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.
இதன் பிரகாரம் இன்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல்முகத்துவரத்தில் அமைந்துள்ள துவாரகா பாடசாலைக்கு களவிஜயத்தினை மேற்கொண்டிருந்தோம்.
கணினிப்பயிற்சியின் அவசியம், எதிர்கால தேவை பற்றிய தெளிவூட்டலை மாணவர்களுக்கு வழங்கியதோடு இந்த செயற்றிட்டத்தினைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு பயிற்சிக்கான ஆரம்பகட்ட நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெற்றது.
இதற்கான நன்கொடையினை வழங்கும் மனித நேய நம்பிக்கை நிதியத்தினருக்கு பாடசாலை சமூகம் சார்பாகவும், எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சார்பாக நன்றிகளையும் நாம் தெரிவித்துக்கொள்கிறோம்.