ஒரு நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பதில் வகுப்பறை முக்கிய பங்காற்றுகின்றது. அந்த வகையில் நாளைய தலைவர்களை உருவாக்குவதில் பாலர் பாடசாலைகள் முக்கியம் பெறுகின்றது. போதியளவு உணவு, கல்வி அறிவு, மேலதிக செயற்பாடுகள் என முறையான மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதில் பங்களிப்புச் செய்யும் பாலர் பாடசாலைகளுடன் கைகோர்த்து செயற்படுவது எமது தலையாய கடமையாகும்
அந்த வகையில் எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டத்தினூடாக எம்முடன் இணைந்து பயணிக்கும் பாலர் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான இந்த வருடத்திற்குரிய கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் எமது ஐந்து பாலர் பாடசாலைகளிலும் பயிற்றுவிக்கும் ஒன்பது ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் .பாலர் பாடசாலை எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மேற்பார்வை செய்யப்பட்டதோடு எதிர்வரும் ஆண்டில் அவர்களுக்கான எமது நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
எமது சத்துணவுத்திட்டத்தின் மூலமாக மாணவர்களின் வரவில் மாற்றம் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் சில பாலர் பாடசாலைகளில் விளையாட்டு பொருட்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. அத்துடன் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் இந்த ஆசிரியர்கள் குறைவான ஊதியத்துடன் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுகின்றனர். அந்த வகையில் இவர்களுக்கான கொடுப்பனவு மற்றும் உளவளத் துணைப் பயிற்சிகளும் வழங்கப்படுவது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




