விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நடைமுறைப்படுத்தப்படுகிற உள, உடல் நலம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கான புகலிடம் ஒரு முக்கியமான செயற்றிட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அடிப்படைக் கணினிப்பயிற்சி , பனையோலைப் பயிற்சி என இம்மாணவர்களுக்கான பயிற்சிநெறிகள் முன்னெடுக்கப்படுவதோடு சத்துணவுப்பொதிகள் வழங்குதல் , விசேட தினங்களுக்கான பொதிகள் வழங்குதல் போன்ற செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
இதன் அடிப்படையில் இன்றைய தினம் புகலிடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக அடிப்படைக் கணினிப் பயிற்சி நெறிக்கான முதற்கட்ட மதிப்பீடு இடம்பெற்றது. 4 மாணவர்கள் இதில் கலந்துகொண்டு தமது கணிப்பீட்டுப் பயிற்சியைத் திறம்பட மேற்கொண்டிருந்தனர். இச் செயற்பாட்டிற்காக அறக்கட்டளையின் சேவையாளர்களுடன் விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின் சேவையாளர்களும் தமது பங்களிப்பினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான செயற்பாடுகளை விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஊடாக முன்னெடுத்து வரும் எமது புலம்பெயர் அறக்கட்டளை உறவுகளிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இன்றைய தினம் எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.