விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களின் வாயிலாக எம்முடன் இணைந்து பயணிக்கும் உறவுகளுடன் நாம் எமது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படுத்தி வருகிறோம்
அந்த வகையில் மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் திட்டத்தின் ஊடாக உள்வாங்கப்பட்ட செங்கலடி பிரதேசத்தில் உள்ள பொறுப்பெடுக்கப்பட்ட மாணவர்களின் குடும்பத்தினருடன் நாம் இன்றைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமர்சையாக கொண்டாடினோம்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தினை முன்னிட்டு அவர்களின் குடும்பங்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது. மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு இன்றைய காலகட்டத்தில் கல்வியின் முக்கியத்துவம் பற்றி எமது நிறைவேற்றுப் பணிப்பாளரால் சிறப்பான உரை ஒன்றும் நடாத்தப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகளில் எமக்கு கரம்கொடுக்கும் எமது அறக்கட்டளை உறவுகளான அமெரிக்காவில் வசிக்கும் கரன் சரவணா , லலித் சரவணா, சரவணா எஸ் ரங்கசுவாமி குடும்பத்தினருக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு கிறிஸ்துமஸ் தின மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.










