சிறுவர்களும் எதிர்கால கல்வியும்

உதவிகோரல் திட்டமுன்மொழிவு

செயற்றிட்ட பிரிவு : சிறுவர்கள் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம்

செயற்பாடு : பாலர் பாடசாலைகள் பொறுப்பெடுக்கப்பட்டு போசாக்குணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான உதவியும்

நியாயப்படுத்தல் :
இலங்கையில் வுறுமையான மாவட்டங்கள் வரிசையில் முல்லைதீவு, மட்டக்களப்பு காணப்படுகின்றது. இந்த வறுமைக்கும் கல்வி அறிவிற்கும் என்ன சம்பந்தம் என்று பார்தால் ஒரு மனிதனின் மூளையின் 95% வளர்ச்சி 5 வயதுக்குள் நடைபெறுவதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த வளர்ச்சி சிறப்பாக இருக்கு போசாக்கான உணவுகள் இந்த வயதுக்குள் போதுமானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அறிவிலும் திறமையிலும் வலுப்பெற முடியும்.
இந்த வறுமை காரணமாக எதிர்காலத்தில் எமது மாவட்டங்களில் உள்ள சிறார்கள் அறிவுத்திறன் குறைவடைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றது.

செயற்படுத்தும் விதம் :
எனவே பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சிறார்கள் அதிகம் உள்ள பாலர் பாடசாலைகளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களது ஆலோசனைக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்டு நிறையுணவும் போசாக்கும் இவர்களிற்கு முக்கியம் என்னும் தூரநோக்கில் இந்த பாலர் பாடசாலைகளில் போசாக்குணவு வழங்கும் செயற்பாட்டினை முன்னெடுக்கின்றோம்.
தெரிவுசெய்யப்பட்ட பாலர் பாடசாலைகளில் கல்விபயிலும் சிறார்களிற்கான போசாக்குணவு மற்றும் ஆசிரியைகளிற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கல் போன்ற செயற்பாடுகளுடன் விசேட நிகழ்வுகளின் போது சிறுவர்களிற்கான பரிசுப்பொருட்கள் என்பன வழங்கி இவர்களின் ஆரம்ப பருவத்தை ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் கழித்திடும் வகையிலான செயற்பாடுகள்.

பயனாளிகள் :
பாலர் பாடசாலையில் உள்ள 3 தொடக்கம் 5 வயதுவரையான சிறுவர்கள்

காலப்பகுதி : ஜனவரி 2024 தொடக்கம் டிசம்பர் 2024

எதிர்பார்க்கப்படும் அடைவு :
வறுமை காரணமாக காலை உணவு கிடைக்காத சிறுவர்களிற்கு உணவு கிடைப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தியமை.
ஊட்டச்சத்து வழங்கியதன் மூலமான ஆரோக்கியமான உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியுடைய எதிர்கால சந்ததியினை உருவாக்கல்.

எனவே எமது உதவித்திட்டத்தில் உள்வாங்குவதற்காக எமக்கு மேலதிகமாக சில பாலர் பாடசாலைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே பாலர் பாடசாலைகளை பொறுப்பெடுத்து அவர்களிற்கான மாதாந்த உதவியினை வழங்க முன்வரும் எமது அறக்கட்டளையின் உறவுகள் தொடர்புகொள்ளவும். அனைத்து விபரங்களையும் உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.

தொடர்புக்கு : http://wa.me/+94776770780

மேலதிக தகவல்களுக்கு
க.பிரதீஸ்வரன்
நிறைவேற்று பணிப்பாளர்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
மட்டக்களப்பு.
+94777105569
kpratheeswaran@vcf.lk
www.vcf.lk

நன்கொடைகள் வழங்கிட

Donate Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *