பாடசாலைக்கல்வியின் பின்னரான வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய கேள்விக்குறியுடன் வாழ்கின்ற எமது இளம் சமூகத்தினை தட்டியெழுப்பி அவர்களை வலுப்படுத்துவதன் மூலம் சமூகப்பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தன்னலமின்றி ஈடுபடும் எமது சேவையாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு பயிற்சியினை United Board for Christian Higher Education in Asia அமைப்பின் நிதியுதவியுடன் ICRDCE நிலையத்தினால் 12 நாட்கள் இந்தியாவிற்கு அழைத்தது முதல் முற்று முழுவதும் இலவசமாக வழங்கியிருந்தனர்.
வாழ்வியல் மற்றும் சமுதாய கல்லூரி பற்றிய இந்த வதிவிட பயிற்சிப் பட்டறையில் கற்பித்தல் முறைமைகள், மற்றும் எதிர்கால பயிற்சி திட்டமிடல் போன்றவற்றுடன் அங்குள்ள பல்வேறு சமுதாய கல்லூரிகளையும் பார்வையிட்டு அங்குள்ள முறைமைகள் தெளிவூட்டப்பட்டது.
சிறப்பான முறையில் பயிற்சி முடித்து இன்று சான்றிதழினைப் பெற்ற எமது சேவையாளர்கள் LifeSkill Trainer என்னும் நிலைக்கு வலுவூட்டப்பட்டமை எமது கல்லூரிக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமே.
தொடர்ச்சியான எமது இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் செயற்பாடுகள் மேலும் விரிவாக்கப்பட்டு தரம் மிக்க பயிற்சியினை வழங்குவதன் ஊடாக நாம் எமது இலக்கை நோக்கிய பயணத்தினை மேற்கொள்ளத் தாயராகியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.