தரம் 5 மாணவர்களிற்கான நுண்ணறிவு

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்க்கு மாணவர்களை தாயர்படுத்தி சித்தியடைவினை அதிகரிப்பதற்காக நுண்ணறிவு பாடத்திற்கான விசேட வகுப்பு சிறப்புத்தேர்ச்சி பெற்ற ஆசிரியர் மூலமாக மட்/வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகின்றது. இதற்காக எமது அறக்கட்டளையுடன் கடந்த 3 வருடங்களிற்கு மேலாக பல்வேறு செயற்பாடுகளிற்கு உதவி மேற்கொண்டு வரும் மனிதநேய நிதியம் நிதியுதவி வழங்கிக்கொண்டிருக்கின்றது.

பயிற்சி வகுப்பு செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்பட்டதோடு மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாகவும் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடப்பட்டது. எதிர்வரும் 16.10.2023 மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகின்றார்கள்.

இங்கு அனேகமான மாணவர்கள் சாதாரண கூலித்தொழில் புரியும் குடும்பத்து மாணவர்கள் என்பதனால் இவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடையும் பட்சத்தில் அரசாங்கத்தினால் மாதாந்தம் 1800 படி அவர்கள் க.பொ.த உயர்தரம் கற்கும் வரை பெற்றுக்கொள்வார்கள். எனவே இந்த செயற்பாடு மாணவர்களிற்கான முதலீடு என்றே கருதமுடியும்.

எதிர்வரும் காலங்களில் மேலும் சில பாடசாலைகளிற்கு இதனை விரிவுபடுத்துவதன் மூலம் வறுமைநிலையில் உள்ள குடும்ப மாணவர்களுக்கான ஒரு முதலீட்டினை மேற்கொள்ள உதவ விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *