விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது சுயதொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையை வழங்கும் வண்ணம் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தினூடாக எமது சமுதாயத்தின் தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டிற்கான தனது பங்களிப்பை வழங்கிவருகின்றது.
அந்த வகையில் எமது அறக்கட்டளையினால் அடையாளம் காணப்பட்ட சுயதொழில் முயற்சியாளரான திருமதி.தங்கமலர் கணேசராஜா அவர்களுக்கான முதலீட்டு ஊக்குவிப்புத்தொகையாக முதற்கட்டமாக 30 000 ரூபாய் வழங்கப்பட்டதோடு அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டது. இச்செயற்பாடானது வாழ்வாதார ஊக்குவிப்பாக மட்டுமன்றி அவரது குடும்பத்தினர் மற்றும் மூன்று பிள்ளைகளுக்குமான கல்வி மேம்பாட்டிற்கும் பாரியதொரு பங்களிப்பாகும்.
இச்செயற்பாட்டிற்காக நிதி அனுசரணை வழங்கிய எமது அறக்கட்டளை உறவான அமெரிக்காவில் வசிக்கும் திரு.வாமதேவன் அமர்நீதி அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வாறான சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதன் மூலம் வேலையற்றோரின் வீதத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களைக் கொண்ட குடும்பங்களைத் தரம் உயர்த்தி அவர்களின் கல்விக்கான பங்களிப்பை மேற்கொள்வதாகவும் அமையும். எனவே, நீங்களும் உங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவதன் மூலம் தனிமனித வலுவூட்டலைத் தாண்டிய குடும்பங்களை முன்னேற்றலாம்.
மேலதிக தொடர்பிற்கு:
https://wa.me/+94776770780
நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை,
மட்டக்களப்பு.