வாழ்க்கைத்திறன் ஓர் தேடல் !!

இளைஞர், யுவதிகள் மாத்திரமின்றி மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக பின்தங்கிய கிராமப்புறத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்குமான வாழ்வியல் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் மாற்றத்திற்கான வலுவூட்டலினை திறன்பட மேற்கொண்டு முறையான சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்.

அந்த வகையில் கிராமங்கள் தோறும் களங்களமைத்து விழிப்புணர்வு செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் வாழ்வியல் தொடர்பான அறிவினை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மாணவர்களின் தொழிற்பாதைக்கான வழிகாட்டலாகவும் அமைகின்றது.

அதற்கிணங்க UK இல் பிரபல்யமான கல்லூரிகளான Writtle College ரூ IOM International Business School போன்றவற்றில் தலைமை விரிவுரையாளராகவும் முதுமானி கற்கைகளிற்கான சிறப்பான விரிவுரையாளராக 20 வருட அனுவத்துடன் Optima Foundation-UK இன் பணிப்பாளராக இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் சமூகப்பணியாளராக தாழ்ந்துபோன சமூகத்தினை கட்டியெழுப்பும் சேவையினை ஆற்றியதுடன் பல நாடுகள், நிறுவனங்களுக்கு ஒரு திட்டமிடல் ஆலோசகராக பணிசெய்த ஒரு அனுபவம் மற்றும் கல்விப்புலமை உடைய இலண்டனில் வசிக்கும் கலாநிதி.தோமஸ் ஜெயந்திரன் அவர்கள் எமது கல்லூரியுடன் நீண்டகால தொடர்பினை பேணியதுடன் எமக்கான உதவிகள் ஆலோசனைகளை வழங்கி வருகின்றார்.

இலங்கை வருகைதந்த அவர் எமது கல்லூரிக்கு வருகைதந்து சேவையாளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டு கல்லூரி மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை உள்ளடங்களாக இந்தியா சென்று வாழ்வியல் பயிற்சி ( TOT ) பெற்று வந்த எமது சேவையாளர்கள் வாழ்க்கைத்திறன்கள் பயிற்சி தொடர்பான சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் போன்றவை பற்றியும் வாழ்வியல் மேம்பாட்டு பயிற்சியினை சிறப்பான முறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் சம்பந்தமாகவும், கலந்துரையாடப்பட்டமையுடன் எதிர்காலத்தில் இளைஞர்களை வலுவூட்டுவதற்கான எமது செயற்பாடுகள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்கினார்.

கலாநிதி.தோமஸ் ஜெயந்திரன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *