உலர் விதையின் மீது படும் சிறு மழைத்துளி கூட பெரு மரத்தைத் தோற்றுவிக்க வல்லது. அவ்வாறே வழி தவறும் சமுதாயத்தின் ஒவ்வொருவர் வாழ்விலும் வழிகாட்டியாய் நாம் ஏற்படுத்தும் மாற்றத்திற்கான வலுவூட்டல் எமது சமுதாயத்தையே மாற்றியமைக்க வல்லது.
அதற்கிணங்க, பாடசாலைக் கல்வியிலிருந்து இடைவிலகிய மற்றும் இலட்சியத்தை அடையாளம் காண முடியாத பின்தங்கிய கிராமப் பிரதேச இளைஞர் யுவதிகளின் மாற்றத்திற்கான வலுவூட்டலாக மாதந்தோறும் களங்களமைக்கும் செயற்பாட்டினை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.
அதனடிப்படையில் ஆனி மாதத்திற்கான நிகழ்வு சேவா நிர்ணய ஏற்பாட்டில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பயிற்சி உத்தியோகத்தர்.திரு.சார்ள்ஸ் கிரேஷியன் அவர்களால் சிறப்பாக நடாத்தப்பட்டது. 60 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தமக்கான வழிகாட்டலைப் பெற்றுக்கொண்டனர்.
இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக அனுசரணை வழங்கிய கனடாவில் வசிக்கும் திரு.கோபால் பகீரதன் அவர்களுக்கு எமது அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.