சிறு வயது முதல் பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் அடிப்படைக் கணனி பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்ளுதல் அத்தியாவசியமானதொன்றாகும். அந்த வகையில் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மற்றும் தேவைப்பாடுடைய மாணவர்களுக்கான கணிணி செயலமர்வுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
அதனடிப்படையில் முன்னேற்றகரமான ஒரு மாணவர் சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் நிதி அனுசரணையுடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வெருகலில் அமைந்துள்ள துவாரகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கணிணி வகுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன் பிரகாரம் அப் பாடசாலையின் மேற்பார்வையைத் தொடர்ந்து மதிப்பீட்டு வகுப்பிற்கான களவிஜயத்தினை எமது சேவையாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.
இதற்காக நன்கொடை உதவிபுரியும் மனித நேய நம்பிக்கை நிதியத்தினருக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.