விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நடைமுறைப்படுத்தப்படுகிற விசேட தேவையுடைய மாணவர்களுக்கான புகலிடம் ஒரு முக்கியமான செயற்றிட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சத்துணவுப்பொதிகள் வழங்குதல் , விசேட தினங்களுக்கான பொதிகள் வழங்குதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதோடு
அடிப்படைக் கணினிப்பயிற்சி , பனையோலைப் பயிற்சி என இம்மாணவர்களுக்கான பயிற்சிநெறிகளையும் நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
இதனடிப்படையில் புகலிடத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான அடிப்படைப் பனையோலைப் பயிற்சி நெறியானது அங்குள்ள சுயதொழில் முயற்சியாளரான திரு.குகன் என்பவரால் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை இதனை ஒரு தொடர் செயற்பாடாக முன்னெடுக்க விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு பயிற்சியளித்து அவர்களையும் சுயதொழில் முயற்சியாளர்களாக உருவாக்க நாம் திட்டமிட்டுள்ளோம்.
இச்செயற்பாட்டிற்காக மாதாந்தம் 35000 LKR தேவைப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாட்டினை மேற்கொள்வதன் மூலம் விசேட தேவையுடையோருக்கான ஒத்துழைப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டலாகவும் இது அமையும். ஆகையால், தங்களது பங்களிப்பானது ஒரு சுயதொழில் முயற்சியாளருக்கான வாழ்வாதாரத்தை வழங்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.