பசுமை உலகிற்கு வித்திடுவோம்..

இன்றைய காலகட்டத்தில் சூழல் மாசடைதல், புவி வெப்பமாதல் போன்ற விளைவுகளால் நாம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் தொடர்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது எமது கடமையாகும்.

அந்தவகையில், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் பசுமைப்புரட்சி திட்டத்திற்கான கலந்துரையாடல் மட்/ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிபர், சூழல் பாதுகாப்புக் கழக பொறுப்பாசிரியர், பிரதேச செயலகத்தின் சூழல் பாதுகாப்பு இணைப்பாளர், எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட 25 சூழல் பாதுகாப்பு குழு மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் இந்த சூழல் பாதுகாப்பு குழு மாணவர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளை குறிப்பிட்டனர். அவையாவன

  • 🌱அவர்கள் வீடுகளில் மரங்கள் நட்டு பராமரித்தல்,
  • 🌱ஏனைய மாணவர்ளிற்கு விழிப்புணர்வினை மேற்கொள்ளல்,
  • 🌱மருவி வரும் மரங்களை அடையாளம் கண்டு அவற்றினை அவற்றை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வினை மேற்கொள்ளல்,
  • 🌱சுற்றாடல் தினங்களை கொண்டாடுதல்.
  • 🌱பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு.
  • 🌱விதைப்பந்து உற்பத்தி,
  • 🌱பனைமர விதைகளை சேகரித்து குளக்கட்டுகளில் நடல்.
  • 🌱பயிர் விதைகள் நாற்றுமேடை தயாரிப்பு

இவ்வாறான விடயங்களை மேற்கொள்ளுவதற்கான திட்டங்களை எம்மிடம் பகிர்ந்தனர்.

இதன் அடிப்படையில் அவர்களின் செயற்பாடுகளிற்கு எம்மிடம் சில உதவிகள் கோரப்பட்டது

  • மாணவர் ஒருவருக்கு 4 மரங்கள் வீதம் 100 பழமரங்கள்
  • நாற்றுமேடை தயாரிப்பிற்கான உதவியும் இதன் மூலம் பயிர் கன்றுகளை விற்பனை செய்து ஏனைய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தல்.

எம்மைத் தாங்கும் இயற்கை அன்னையின் நலனைப் பேணிப்பாதுகாக்க எம்மாலான பங்களிப்பை நாம் வழங்க வேண்டும். இன்றைய மாணவர்களிடையே நாம் ஏற்படுத்தும் சிறு விழிப்புணர்வானது எதிர்கால தலைமுறையையே மாற்றியமைக்க வல்லது.

இந்த செயற்பாட்டிற்கு உதவ விரும்பும் உறவுகள் தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு : http://wa.me/+94776770780

மேலதிக தகவல்களுக்கு
க.பிரதீஸ்வரன்
நிறைவேற்று பணிப்பாளர்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை
மட்டக்களப்பு.
+94777105569
kpratheeswaran@vcf.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *