இன்றைய காலகட்டத்தின் இளம் சமுதாயத்தினருக்கு கல்வியைக் காட்டிலும் உளவியல் ஆரோக்கியம் மிகவும் தேவைப்பாடுடையதாகக் காணப்படுகின்றது.
அதற்கிணங்க மாணவர்களிடையே கற்றல் செயற்பாடுகள் மாத்திரமல்லாது வாழ்க்கைத் திறன் மற்றும் விழுமியங்கள் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியினரின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களுக்கு ஆற்றுப்படுத்துகைக்கான வழிகாட்டல் காட்சிப்படுத்தல் பதாதை வழங்கப்பட்டது. எமது அறக்கட்டளையின் திட்டமுகாமையாளருட்பட களப்பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இவ்வாறான செயற்பாடுகளூடாக மாணவர்களுக்கான வழிகாட்டலை வழங்குவதில் பங்களிப்பு செய்வதன் மூலம் அவர்களுக்கான உள நலம் மற்றும் ஆரோக்கியமான மனோபாவத்திற்கும் இது பெரிதும் உதவியாக அமையும் என்பதே எமது நோக்கமாகும்.