வாழ்வாதாரத்திற்கென சுய தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்குவதோடு நின்றுவிடாமல் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பிரதேசங்களில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதன் மூலமும் அவர்களைப் பொருளாதார ரீதியிலும் மேம்படுத்த முடியும்.
அந்த வகையில் எமது பொருளாதார அபிவிருத்தி திட்டத்தினூடாக ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கோவில்குளம் கிராமத்தில் வாழும் குடும்பத் தலைவிகள், பெண்கள் ஆகியோருக்கான தொடர் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அதற்கிணங்க கோவில்குளம் சகரம் மையத்தில் குடும்பத்தின் தலைமைப் பொறுப்புகளை ஏற்று நடக்கும் பெண்களுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றதோடு திறன் விருத்தி குழுப் பிரிப்புகளும் கோவில்குளம் கிராம சேவகரின் தலைமையில் இடம்பெற்றது.
ஆடை உற்பத்தி, சிற்றுண்டிகள் தயாரித்தல், கைத்தறி மற்றும் நெசவு உற்பத்தி போன்ற அவர்களது திறன்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் பயிற்சிப்பட்டறைகள் அமைத்து. இந்த திறன்களின் ஊடாக அவர்களது குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வானது அவர்களின் திறன்களை மேம்படுத்துவதாக மட்டுமன்றி அவர்களின் பொருளாதாரச் சுமைகளுக்கும் தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறான செயற்பாடுகளுக்கான உங்கள் பங்களிப்பு மற்றும் மேலதிக தொடர்புகளுக்கு,
நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை,
புதுக்குடியிருப்பு.