விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது “மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” எனும் திட்டத்தினூடாக பின்தங்கிய கிராமப் பிரதேசங்களில் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் கற்றலில் ஆர்வமுள்ள மாணவர்களை அவர்களின் பாடசாலைகளினூடாகத் தெரிவுசெய்து புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் மாதாந்தம் அவர்களின் கல்விக்கான ஊக்குவிப்புத்தொகை ஒன்றை வழங்குவதன் மூலம் அவர்களின் கல்விக்கான பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் கனடாவில் வசிக்கும் எமது நீண்டகால நன்கொடையாளராகிய திரு.இ.ஏகாம்பரம் ஐயா அவர்களின் உதவியுடன் 2020 இல் ஐந்து பேர் கொண்ட சிறிய மாணவர் தொகையுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது திட்டமானது தற்போது ஆரையம்பதி மற்றும் செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளை மையப்படுத்தியதாக இற்றைக்குவரை 143 மாணவர்களுக்கான தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.
அந்த வகையில் 2022 இல் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 5 பேரும் சித்தியடைந்து அதில் 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றனர்.
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 3 மாணவர்களும் சித்தியடைந்தனர்.
2023 இல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 32 மாணவர்களில் 25 பேர் சித்தியடைந்து அதில் 12 மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பினை பெறுவர்.
இந்த வருடம் (2024) எமது மாணவர்களுக்கான உதவியை வழங்கிக்கொண்டிருக்கும் எமது அறக்கட்டளை உறவுகளும் அவர்களால் பொறுப்பெடுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையும் வருமாறு =
- திரு.ஏகாம்பரம், கனடா – 28 மாணவர்கள்
- திருமதி.கலா லோகநாயகம், பிரான்ஸ் – 2 மாணவர்கள்
- திரு.திருமதி.பிரித்திவராஜ், அமெரிக்கா – 5 மாணவர்கள்
- திரு.திருமதி.சிவானந்தன் குடும்பத்தினர், அமெரிக்கா – 3 மாணவர்கள்
- திரு.தவச்செல்வன், அமெரிக்கா – 4 மாணவர்கள்
- திரு.செந்தூரன், மட்டக்களப்பு – 2 மாணவர்கள்
- செல்வி.லோசனா, ஸ்விட்சர்லாந்து – ஒரு மாணவி
- திரு.காந்தரூபன், ஸ்விட்சர்லாந்து – 2 மாணவர்கள்
- திரு.செந்தில்செல்வன், அமெரிக்கா – 5 மாணவர்கள்
- திருமதி.கணேசராணி ரவீந்திரன் நியூசிலாந்து – 3 மாணவர்கள்
இவ்வாறு தற்போது 54 மாணவர்கள் மாதாந்தம் எமது உதவியைப் பெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை, பாடசாலைகளினூடாக பல வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களின் கோரிக்கைகள் வந்த வண்ணமுள்ளதால் எமது புலம்பெயர் உறவுகள் இம் மாணவர்களை பொறுப்பெடுத்து அவர்களிற்கு உதவிடுவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறு கற்றலில் ஆர்வமுள்ள மாணவர்களுக்காக நீங்கள் வழங்கும் சிறு பங்களிப்பானது (3500 LKR) அவர்களின் பெறுபேற்றில் மாத்திரமின்றி எதிர்கால வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.