இரக்கப்படுவதை விட அவர்களை சிறக்கப் பண்ணுவோம்.

ஆரையம்பதியில் உடல், உள நலம் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்கள், மாணவர்களை பராமரிக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டு வந்த புகலிடம் நிலையத்தின் செயற்பாட்டிற்கு நிதியுதவி இல்லாமல் போனதையிட்டு எமது அறக்கட்டளையினை அவர்கள் நாடியபோது. அங்கு வரும் இறைவனின் குழந்தைகளான அவர்களிற்கு சத்துணவு பொதிகளை வழங்க எமது அறக்கட்டளை உறவுகள் முன்வந்தன.

அதன் அடிப்படையில் திரு.இ.ஏகாம்பரம் அவர்களின் நண்பர்கள், உறவுகள் இவர்களிற்கான கணினி பயிற்சி மற்றும் ஏனைய போக்குவரத்து செலவுகளுக்கான நன்கொடையினை கடந்த வருடம் வழங்கியிருந்தனர்.

அதனை தொடர்ந்து இவ்வருடம் மனித நேயம் நம்பிக்கை நிதியம், மற்றும் திரு.திருமதி.கணேசராணி குடும்பம் மாதாந்தம் சத்துணவு பொதிகளை வழங்க முன்வந்து இன்றுவரை அதனை வழங்கிக்கொண்டு இருக்கின்றனர்.

அதனை தொடர்ந்து தற்போது 6 விசேட தேவையுடையோருக்கு பனை ஓலையில் கைப்பணி பொருட்கள் உருவாக்கும் பயிற்சி நடைபெறுவதற்கும் அவர்களிற்கான போக்குவரத்திற்குமாக நாம் விடுத்த கோரிக்கைக்கு அமெரிக்காவில் உள்ள எமது நன்கொடை உறவான திரு.அமர்நீதி வாமதேவன் அவர்கள் உடனடியாக 3 இலட்சம் நன்கொடையினை வழகியிருந்தார் அதன் மூலம் கடந்த 3 மாதங்களாக பயிற்சி வழங்கப்பட்டு அவர்களினால் அழகிய வடிவில் கைவினைப்பொருட்கள் உருவாக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு குறைபாடுடன் இருந்தாலும் மனதளவில் எந்த குறைபாடும் இல்லாமல் தமக்கான திறனை வளர்த்துக்கொள்ள உதவிக்கொண்டிருக்கும் திரு.அமர்நீதி வாமதேவன் அவர்களிற்கு நன்றியினைத் தெரிவித்து கொள்கின்றோம்.

எதிர்காலத்தில் எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பயிற்சி நிலைய முகாமைத்துவ அனுபவத்தின் அடிப்படையில் இந்த இடத்தில் விசேட தேவையுடைய இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறார்கள், மாணவர்களிற்கான திறன்விருத்தி பயிற்சியும், அவர்களிற்கான வாழ்வாதார விருத்தி மற்றும் உளநல சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான உதவியினை வழங்க விரும்பும் நல்லுள்ளங்கள் தொடர்புகொள்ளவும்.

மேலதிக தொடர்பிற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *