மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமாகக் காணப்படும் ஆலங்குளம் கிராமம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கூட சிரமத்தை எதிர்நோக்கும் அதிகஷ்டப் பிரதேசமாகும். இக்கிராமத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு பாரியதொரு பிரச்சினையாகும்.
அந்தவகையில், ஆலங்குளம் அ.த.க.பாடசாலையில் முதன் முதலாக பரிசளிப்பு விழாவினை நடாத்தவிருக்கும் அதேவேளை அந்நிகழ்வில் பங்குபற்றும் மாணவர்களுக்கு சில்வர் தண்ணீர் போத்தலை பரிசாகக் கொடுப்பதற்காக எமது அறக்கட்டளையிடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் வேண்டுகோளுக்கிணங்க எமது அறக்கட்டளையினரால் மேற்கொள்ளப்பட்ட களவிஜயத்தை அடுத்து அவர்களின் கோரிக்கைக்கு அமைய ஆரம்பப்பிரிவு மாணவர்கள் 82 பேருக்கான தண்ணீர் போத்தல்கள் பாடசாலை ஆசிரியரிடம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் அவை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வானது எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இடம்பெற்றதோடு
எமது அறக்கட்டளையின் நிறைவேற்றுப் பணிப்பாளர், திட்டமுகாமையாளருட்பட சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாகத் தமது நிதி அனுசரணையை வழங்கிய இலண்டனில் வசிக்கும் திரு.சிவசுமித்திரன் விசுவநாதர் அவர்களுக்கு எமது அறக்கட்டளையினூடாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.