இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் பல்கலைக்கழக வாய்ப்பினை தவறவிட்ட, க.பொ.த உயர்தரம், சாதாரணதரம் சித்தியடையாத மாணவர்கள் வழிதவறிவிடாமல் அவர்களிற்கும் ஒரு வழி இருக்கின்றது என்பதனை உணர்த்தும் வாழ்வியலும் வழிகாட்டலும் என்னும் விசேட பயிற்சியினை வடிவமைத்து வருடாந்தம் இதன் மூலம் 600 வழிதெரியாமல் திண்டாடும் இளைஞர், யுவதிகளுக்கான வழிகாட்டலை மேற்கொள்ளும் வகையிலான எமது திட்டத்தின் ஒரு பிரதான செயற்பாடாக மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற இவ்வருட முதலாம் தொகுதி மாணவர்களின் பயிற்சி அடைவின் இறுதி நாள் காட்சிப்படுத்தல் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு ஆரையம்பதி பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர், திறன்விருத்தி உத்தியோகத்தர், இளைஞர் சேவை அதிகாரி, கிராம சேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட எமது விவேகானந்த குடும்பத்தின் சேவையாளர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களின் வெளிக்களச் செயற்பாடுகள் தொடர்பான காட்சிப்படுத்தலைத் தொடர்ந்து வாழ்க்கை திறன் பயிற்சியினால் அவர்களது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பிலான தனிப்பட்ட அனுபவப் பகிர்வும் இடம்பெற்றது.
இம் மாணவர்களுக்கான வாழ்க்கைத் திறன்மேம்பாட்டு பயிற்சியை சிறப்பாக வடிவமைத்து நடைமுறைப்படுத்திய விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி சேவையாளர்களுக்கும், விசேடமாக பயிற்சிக்கு பொறுப்பாக இருந்த கல்லூரியின் பயிற்சி உத்தியோகத்தர், வளவாளர் திரு.சார்ள்ஸ் கிரேசியன் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது அறக்கட்டளையினூடாக இவ்வாறான செயற்பாடுகளுக்காக தமது நிதி அனுசரணையை வழங்கிக் கொண்டிருக்கும் எமது அறக்கட்டளையின் புலம்பெயர் உறவுகளுக்கு எமது அறக்கட்டளை சார்பாக நன்றிகளைத் தெரிவிப்பதோடு, வழிதெரியா எம் எதிர்கால இளைஞர்களிற்கான வழிகாட்டலில் நீங்களும் இணைந்து உங்கள் பங்களிப்பினை வழங்கிட முடியும்.
மேலதிக தொடர்புகளுக்கு,
https://wa.me/+94776770780
நிர்வாகம்,
விவேகானந்த சமுதாய அறக்கட்டளை