தடைகளை படிகளாக்குவோம் ..

வறுமைக் கோட்டிற்குக் கீழான பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கல்விக்கு வறுமை ஒரு தடையாகி விடக்கூடாது என்பதற்காக மாணவர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் திட்டத்தினூடாக எம்மால் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.

அதனடிப்படையில் எம்மால் பொறுப்பெடுக்கப்பட்டு மாதாந்தம் ஊக்குவிப்புத் தொகை பெற்றுக்கொள்ளும் இரு மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கப்படும் நிகழ்வானது விவேகானந்தத் தொழில்நுட்பவியல் கல்லூரியின் கொம்மாதுறை கிளையில் இடம்பெற்றதோடு விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்டமுகாமையாளரால் அதற்கான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த செல்வி.மகேஸ்வரன் றீர்த்தனா மற்றும் கொம்மாதுறையைச் சேர்ந்த செல்வி.டினோஜன் லக்ஷனா ஆகிய இரு மாணவர்களும் தமக்கான துவிச்சக்கரவண்டிகளைப் பெற்றுக்கொண்டனர்.

அந்த வகையில், எமது பயனாளிகள் இருவருக்கான நன்கொடை அனுசரணையை எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக வழங்கிய நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் திருமதி.கணேசராணி ரவீந்திரன் அவர்களுக்கு எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் நாம் பெருமிதமடைகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *